Author Topic: உருளை பாயாசம்  (Read 952 times)

Offline kanmani

உருளை பாயாசம்
« on: November 05, 2012, 12:46:36 PM »

    உருளைகிழங்கு - இரண்டு
    பால் - ஒரு பெரிய கப்
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய் - இரண்டு
    உப்பு - சிறிது
    தாளிக்க:
    நெய், முந்திரி

 

 
   

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
   

உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
   

பின்னர் எடுத்து தோல் நீக்கி வைக்கவும்.
   

மிக்சியில் தோல் நீக்கிய கிழங்கை போட்டு பாலை ஊற்றி ஒரு கப் தண்ணீரும் சேர்த்து நன்கு கூழ் போல் அடித்து வைக்கவும்.
   

ஒரு சட்டியில் சிறிது நெய் ஊற்றி அதில் அரைத்த கிழங்கு கூழை ஊற்றவும்.
   

அதை அடுப்பில் சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கைவிடாமல் கிளறவும். பின்னர் சர்க்கரை, ஏலக்காய், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்.
   

அடுத்து வேறு சட்டியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து இந்த கலவையில் கொட்டி அடுப்பை நிறுத்தவும்..
   

சூடான சுவையான உருளைக்கிழங்கு பாயாசம் ரெடி.

 
இது சாப்பிட்டு பார்த்தால் நல்ல டேஸ்டாக இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உருளைக்கிழங்கின் வாசமே இந்த பாயாசத்தில் தெரியாது.