கடலை பருப்பு - கால் கிலோ
அச்சு வெல்லம் - கால் கிலோ
மைதா - 200 கிராம்
சீனி - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - கால் லிட்டர்
முதலில் கடலை பருப்பை முக்கால் பதம் வேக வைத்து வடிகட்டவும்.
தேங்காய் பூவை வாணலியில் வதக்கி எடுத்து வைக்கவும்.
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும் (இதற்கு பதம் தேவையில்லை)
வடிகட்டிய கடலை பருப்பை மிக்ஸியில் பொடிக்கவும். தேங்காய் துருவலையும் ஒரு சுற்று விட்டு சேர்க்கவும். ஏல பொடியையும் சேர்க்கவும்.
பொடித்து வைத்த பூரணத்தில் வெல்ல பாகை சேர்த்து கெட்டியாக உருட்டும் பதத்துக்கு பிசையவும்.
மைதா மாவில் சிறிதளவு உப்பு, சீனி சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எலுமிச்சைபழ அளவு பூரணம் எடுத்து உருட்டி மைதா மாவில் தோய்த்து போடவும்.
சுவையான சுழியம் தயார்.