Author Topic: சுவையான...மேகி மசாலா  (Read 918 times)

Offline kanmani

சுவையான...மேகி மசாலா
« on: November 04, 2012, 11:29:02 PM »
Yummy Maggi Masala With Vegetables


இன்றைய குழந்தைகளுக்கு இட்லி, தோசையெல்லாம் பிடித்தது போய், மேகி, நூடுல்ஸ் போன்றவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். அதில் மேகியுடன் சற்று காய்கறிகளையெல்லாம் சேர்த்து சற்று உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவர். இப்போது அந்த மேகி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மேகி - 2 பாக்கெட்
வெங்காயம் - 2
குடை மிளகாய் - 1
கேரட் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் அதில் நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய், கேரட் சேர்த்து, காய்கறிகள் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதித்ததும், அதில் மேகி பாக்கெட்டில் உள்ள மசாலாவை சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.

பிறகு மேகியை அதில் சேர்த்து, மேகி வெந்து தண்ணீர் சுண்டும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்

இப்போது சுவையான காய்கறிகளை சேர்த்து செய்த மேகி மசாலா ரெடி!!!