பீர்க்கங்காய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
புளி - நெல்லி அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பீர்க்கங்காயின் கூரான முனையை மட்டும் நீக்கி விட்டு, தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பீர்க்கங்காய் துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
பின் வறுத்தவற்றை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து, பின் ஆறிய பீர்க்கங்காயையும் மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப அரைக்கவும்.
பின் துவையலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டவும். மிகவும் சுவையான பீர்க்கங்காய் துவையல் ரெடி. சுடு சாதத்திற்கு அருமையாக இருக்கும்.