சுறா மீன் துண்டுகள் - 5
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
அரைத்த தேங்காய் விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம், தக்காளி, இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து முறுகாமல் அரை பாகம் வேகும் அளவிற்கு பொரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அதில் தூள் வகைகள், உப்பு தேங்காய் விழுது, அரை கப் தண்ணீர் சேர்த்து பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு ஒரு மூடி போட்டு கொதிக்க விடவும் மசாலா வாசம் போனதும் இறக்கவும்.
சுவையான மினி சுறா மீன் கிரேவி தயார்.