Author Topic: காளான் குருமா  (Read 931 times)

Offline kanmani

காளான் குருமா
« on: November 03, 2012, 01:34:53 AM »

    காளான் - 200 கிராம்
    வெங்காயம் - 2 பெரியது
    தக்காளி - 2 பெரியது
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    பட்டை, லவங்கம் - தலா 2
    மல்லித் தழை - சிறிது
    உப்பு - தேவைக்கு

 

 
   

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். காளானை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
   

எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
   

பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
   

நன்றாக வதங்கியவுடன் காளான் சேர்த்து வதக்கவும்.
   

அதில் தூள் வகைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
   

வெந்ததும் இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.