Author Topic: வீட்டு தந்தூரி சிக்கன் ரெஸிபி  (Read 889 times)

Offline kanmani

ந்தூரி சிக்கனை ஹோட்டலில் வாங்கினால் விலை அதிகம் இருக்கும். விலை அதிகமாக இருக்கிறதே என்று சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு அருமையான ஐடியா கொடுக்கிறார் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஹைதராபாத் மொகல் பிரியாணி ஹோட்டலின் சமையல் கலைஞர். வீட்டிலேயே மணக்க மணக்க இந்த தந்தூரி சிக்கனை செய்து சாப்பிடலாமாம்.

அவர் கொடுக்கும் டிப்ஸைப் பாருங்களேன்...

தேவையான பொருட்கள்

சிக்கன் – முழு கோழி

தந்தூரி மசாலா - 5 டேபிள் ஸ்பூன்

வினிகர் - 3 டீ ஸ்பூன்

எலுமிச்சை - 2

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீ ஸ்பூன்

தயிர் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

தந்தூரி அடுப்பு செய்ய

செங்கல் - 4

மணல் – ஒரு தட்டு

அடுப்பு கரி – அரை தட்டு

கம்பி – 8

தந்தூரி சிக்கன் செய்முறை

முழு கோழியை நான்கு துண்டாக வெட்டி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். பின் அதில் தந்தூரி சிக்கன் மசாலா, வினிகர், உப்பு, தயிர், இஞ்சிப் பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும்.

மணலை பரப்பி அதன் மேல் செங்கலை வைத்து அதில் கரிதுண்டை போட்டு நெருப்பு மூட்டவும். நெருப்பு கங்கு நன்றாக இருக்க வேண்டும். செங்கலின் மேல், கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கவும். கம்பியின் மேல் மசாலா தடவி ஊற வைத்திருக்கும் கோழி துண்டுகளை வைத்து அடுக்கவும்.

ஒரு அகலமான பாத்திரம் கொண்டு மூடவும்.10 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேகவைக்கவும். சுவையான தந்தூரி சிக்கன் ரெடி. எண்ணெய் தேவையில்லாத இந்த சிக்கன் அனைவருக்கும் ஏற்றது.

பிறகென்ன அடுப்பைப் போட்டு அசத்தலான தந்தூரி சிக்கனை சமைத்து ஒரு கை பார்க்க வேண்டியதுதானே...!