தேவையான பொருட்கள்
பால் - 1லிட்டர்
சர்க்கரை - 2கப்
குங்குமப்பூ - சிறிதளவு
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா, முந்திரி - 20
கேசர் பேடா செய்முறை
பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட விடவும். இதில் சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து பால் தோசை மாவு பதத்தில் திக்காக வந்ததும் அதில் 2 சிட்டிகை குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கவும். இதனுடன் தண்ணீரில் கரைத்த சோளமாவை சேர்த்துக் கிளறவும். கை விடாமல் கிளறவேண்டும். பால் நன்கு சுருண்டு வரும்.
அதைத் தட்டில் கொட்டி, ஆறியவுடன் நறுக்கிய பிஸ்தா, முந்திரி போட்டு வேண்டிய டிசைனில் கட் செய்து அலங்கரிக்கவும்.