மசால் கடலை
தேவையான பொருட்கள்:
வேர்கடலை - 2 கப்
கடலை மாவு - 1 / 4 கப்
மிளகாய்த்தூள் - 2 tsp
கரம் மசாலா - 1 / 2 tsp (பிரியப்பட்டால்)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் வேர்கடலை, கடலை மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, கிள்ளிய கறிவேப்பிலை, உப்பு இவற்றை நன்கு கலந்து கொண்டு, பிறகு.. சிறிது சிறிதாக உள்ளங்கையில் தண்ணீர் எடுத்து... அதை கலவையில் கலக்கவும்.. ஒரே நேரத்தில் மொத்தமாக தண்ணீர் விட கூடாது.. கலவை, உதிரியாக இருக்க வேண்டும்..
பின் ஒரு வாணலியில், எண்ணெய் சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக, உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.. மிகவும் எளிதான செய்முறை.. ஆனால் தண்ணீர் தெளித்து கடலையை கலப்பதில் தான் இருக்கிறது... விஷயம்...
