Author Topic: பிஸ்கட் வித் ஜாம்  (Read 797 times)

Offline kanmani

பிஸ்கட் வித் ஜாம்
« on: October 29, 2012, 06:54:32 PM »

    நெய் - 200 கிராம்
    சீனி - 200 கிராம்
    முட்டை - 2
    மைதா - 500 கிராம்
    சோடா உப்பு - அரை தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை
    வெனிலா சுகர் - 2 பாக்கெட் (இருந்தால்)
    ஜாம் - தேவையான அளவு (விருப்பமான ஜாம்)
    சுகர் பவுடர் - தேவையான அளவு
நெய்யுடன் சீனியை சேர்த்து நன்றாக க்ரீம் பதம் வரும் வரை கலக்கவும்.
   

பிறகு அதனுடன் முட்டை சேர்த்து கலக்கவும்.
   

இதனுடன் உப்பு, வெனிலா சுகர், சோடா உப்பு சேர்த்து விட்டு மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கலக்கவும்.
   

இந்த மாவு கொஞ்சம் தளர்த்தியாக இருக்கும், ஆதலால் இதை சமையலுக்குரிய ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
   

ஒரு மணி நேரத்திற்கு பிறகு நெய் இறுகி கொஞ்சம் கெட்டியான பதத்தில் இருக்கும், இப்போது கிச்சன் மேடையில் கொஞ்சம் மைதாவை தூவி அதில் இந்த மாவை பூரி கட்டை கொண்டு ரொம்ப மெல்லியதாகவும் இல்லாமல், ரொம்ப மொத்தமாகவும் இல்லாமல் திட்டமான (படத்தில் இருப்பது போல்) வளர்த்தவும்.
   

இதை ஒரு சிறிய தம்ளர் அல்லது அச்சு கொண்டு வட்ட வடிவில் வெட்டி எடுக்கவும். அதே குவளை கொண்டு ஒரு முழு வட்டமாக எடுத்து அதன் நடுவில் வேறு ஒரு உபகரணம் கொண்டு நடுவில் ஒரு துளை போடவும்.
   

இவ்வாறு ஒரு முழு வட்டம் மற்றும் ஒரு துளை போட்ட வட்டம் செய்து அவன் ட்ரேயில் அடுக்கி வைக்கவும். இதை 10 நிமிடங்கள் 180° சூட்டில் பேக் செய்து எடுக்கவும்.
   

வெளியில் எடுத்தவுடன் ஒரு ட்ரேயில் வைத்து துளை போடப்பட்ட பிஸ்கட் மீது சுகர் பௌடரை தூவவும்.
   

இப்போது முழு வடிவ பிஸ்கட்டின் அடி பாகத்தில் நடுவில் சிறிது ஜாமை வைக்கவும்.
   

அதை துளையிட்ட பிஸ்கட்டை கொண்டு மூடவும். லேசாக அழுத்தி விட்டால் ஜாம் அந்த துளை வழியே மேலே தெரியும்.
   

இதே முறையில் மெல்டட் சாக்லேட் வைத்தும் செய்யலாம்.
   

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜாம் டேஸ்ட் மற்றும் சாக்லேட் டேஸ்ட் பிஸ்கட்டை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.