Author Topic: மஞ்சளின் மருத்துவ குணங்கள்  (Read 715 times)

Offline kanmani

ஒரு திருவிழா எடுக்கிறாங்கன்னு வச்சுங்கோங்க.. குறிப்பா அம்மனுக்கு... அந்த விழாவுக்கா மஞ்சள் காப்பு கட்டுன்னு சொல்லி கையில் மஞ்சளைக் கட்டுவாங்க.

ஒரு கல்யாணம் நடக்குது.. அங்கேயும் மஞ்சளுக்கு முக்கியப் பங்கு உண்டு...


மங்களகரமான எந்த ஒரு காரியத்திற்கும் மஞ்சள் பயன்படும்....

இதுக்கு மட்டும்தானா? மஞ்சளைப் பத்தி எழுதினால் நாள் முழுக்க எழுதிட்டே இருக்கலாம்.

சாதாரணமாக நம் உணவில்கூட தினந்தோறும் மஞ்சள் சேர்க்கபடுது.. கலருக்காகவா? இல்லீங்க.. அதுல இருக்கிற மருத்துவ குணத்திற்காகத்தான் மஞ்சள் சேர்க்கப்படுது...

மஞ்சள் ஒரு கிருமி நாசினி.
கிருமிகளை விரட்டித் தள்ளுவதில் இதற்கு நிகர் இதுதான்.
வயிற்றுப் பூச்சிகளை போக்குகிறது.
சளி, இருமலுக்கு இது ஒரு நல்ல மருந்து.
சிறு குழந்தைகள் இருமலால் பாதிக்கப்படும்போது நன்றாக காய்ச்சி அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து கொடுத்தால் சளியும், இருமலும் பறந்தே போயிடும்.

வறட்டு இருமல், சளித்தொல்லையால் வரும் இருமல் கொண்டவர்கள் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் உடனே நின்றுவிடும்.

ஜீரணத்திற்கு உதவும் மாபெரும் மருந்து மஞ்சள். நாம் உண்ணும் பல்வேறுப்பட்ட உணவுகளை செரிக்க உதவும்.
மிளகாய் பொடியின் வீரியத்தை குறைத்து, நம்முடைய உடலுக்கு நன்மை செய்கிறது மஞ்சள்.

பெருங்குடல் புற்று நோய், சரும புற்றுநோய்கள் இந்தியாவில் குறைந்தளவே உள்ளதற்கு காரணம்.. நாம் பாரம்பரியமாக மஞ்சளை உணவில் பயன்படுத்திக்கொண்டு வருவதால்தான்...

விரலி மஞ்சலில் குர்குமின் சத்து உள்ளது. இதில் இருக்கிற பாலிபீனால்கள்தான் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. நோய் வராமல் தடுக்கிறது.

சாதாரணமாக எல்லோருக்கும் வயதால் நினைவாற்றல் குறையும். இந்த பிரச்னையை சரிசெய்வதில் மஞ்சள் பயன்படுகிறது.

அசைவ உணவில் மஞ்சள் சேர்ப்பதால் இறைச்சியில் ஏதேனும் கிருமிகள் இருந்தாலும் அவை அழிந்துவிடும்.

சுருக்கமாச் சொல்வதெனில் மஞ்சள் ஒரு கிருமி நாசினி, வலி நிவாரணி, இணை மருந்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..!

மஞ்சள் மருத்துவ குணத்தில் சிறந்தது..!

அன்றாட உணவில் பயன்படுத்துங்கள்.. ஆரோக்கியமான வாழ்வைப் பெறுங்கள்...!