Author Topic: பூ ஜாடியில் பூக்களை வாடாமல் பாத்துக்கங்க!  (Read 4851 times)

Offline kanmani

பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தருபவை. நிம்மதியும் அழகும் தருபவை. வீட்டில் பூ ஜாடியினுள் அழகான பூக்களை வைப்பது வீட்டின் அழகை பன்மடங்காக அதிகரிக்கும். ஆனால் நமக்கு பரிசாக கிடைத்த அல்லது வாங்கிய பூச்செண்டுகளை வைத்தால் ஜாடியில் வைத்தால் ஓரிரு நாட்களிலேயே காய்ந்து விடுவது நமக்கு வருத்தத்தை தருகிறது. அவ்வாறு வாடாமல் பல நாட்களுக்கு பூக்களை பாதுகாக்க முடியும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.

பூ ஜாடியில் வைக்க தேர்ந்தெடுக்கப்படும் பூக்கள் முழுமையாக மலராத மொட்டுக்களை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போதுதான் அவை வீட்டினுள் வைக்கும்போது மலரும். அத்துடன் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும்.

பூக்கள் அதிக நாள் வாடாமல் இருக்க அவற்றை காற்று படும் வகையில் ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது. பழங்கள், காய்கறிகள் ஆகியவை "எ‌த்திலீன்" என்ற வாயு வெளியிடுகின்றன. இதனால் ஆகியவற்றிற்கு அருகில் பூக்களை வைத்தால் அவை விரைவில் வாட வாய்ப்புள்ளது.

அழுகிய, சேதமடைந்த இலைகளையும், பூக்களின் இதழ்களையும் அகற்றிவிட வேண்டும். பூக்களின் காம்புகள் முழுமையாக மூ‌‌ழ்கும் வகையில் தண்ணீரை ஊற்றி, 24 மணி நேரம் வைக்க வேண்டும். இதன் பிறகு பூக்களை சாடியில் வைக்கலாம்.

பூக்களுக்கு சேர வேண்டிய தண்ணீர் மற்றும் சத்து காற்றடைப்பால் சேராமல் போவதை தடுக்க ஐந்து இலைகளை விட்டு, காம்பை வெட்டவும். காம்பைத் தண்ணீருக்கு அடியில் வைத்து வெட்ட வேண்டும். காம்பை சாய்வாக வெட்டுவதால் பூக்களுக்கு அதிக அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டலாம்.

பூ ஜாடி உள்ள அறையில் வெப்பநிலை அதிகம் உயராமல் குளிர்ச்சியாக இருக்குமாறு வைக்கவும். தினமும் ஜாடியில் உள்ள தண்ணீரை மாற்ற வேண்டும். புதிதாக பூக்களை வைக்கும் போதும் தண்ணீரை மாற்றுவது அவசியம். பாக்டீரியாக்கள் வளர்ந்து பூக்களின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை பாதிக்காமல் இருக்க பூ ஜாடியினுள் செம்பாலான சிறிய பொருளை போட்டு வைக்கலாம்.