Author Topic: செல்ல நாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!  (Read 4854 times)

Offline kanmani


அவோகேடோ

மனிதர்களுக்கு மிகவும் சிறந்த உணவான அவோகேடோ, நாய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் உள்ள பெர்சின் என்னும் பொருள் நாய்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே அந்த பழத்தை நாய்களுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.


சாக்லேட், காபி மற்றும் டீ

காப்பைன் உள்ள பொருட்களான சாக்லேட், காபி மற்றும் டீ போன்றவை நாய்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த உணவுப் பொருளில் புரோமின் என்றும் பொருள் உள்ளது. இது நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை சாப்பிட்டால், அவற்றிற்கு சோர்வு, வாந்தி மற்றும் சிலசமயங்களில் இரத்தப்போக்கு போன்றவையும் ஏற்படும்.


காளான்

வீட்டில் சிலசமயங்களில் காளானை சமைத்து சாப்பிடுவோம். அதிலும் காளானை அசைவ உணவுகளோடு சமைப்போம். அப்போது அந்த உணவுகளை நாய்களுக்கு கொடுக்க வேண்டாம். ஏனெனில் அதனை நாய்கள் சாப்பிட்டால், உடலில் பல தொற்றுநோய்கள் அவற்றிற்கு ஏற்படும். சில நேரங்களில் அந்த உணவுகள் நாய்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.


வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டு மனிதர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம் ஆனால் அவற்றை நாய்கள் சாப்பிட்டால், அவற்றின் உடலில் உள்ள சிவப்பணுக்கள் அழிந்துவிட்டு, அனீமியா நோயை உண்டாக்கும். அதற்காக இதனை கொடுக்கவ கூடாது என்பதில்லை, ஆனால் மிகவும் குறைந்த அளவில் கொடுப்பது தான் நல்லது.


திராட்சை அல்லது உலர் திராட்சை

நாய்களை மிகவும் பிடிக்கும் என்றால், அவற்றிற்கு திராட்சை அல்லது உலர் திராட்சைகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இவற்றை சாப்பிட்டால், நாய்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.


வேக வைக்காத அசைவ உணவுகள்

அசைவ உணவுகளை வேக வைக்காமல் கொடுத்தால், அதில் உள்ள பாக்டீரியா, நாய்களுக்கு ஃபுட் பாய்சனை ஏற்படுத்தும். ஆகவே அவற்றிற்கு இந்த உணவுகளை வேக வைத்து, பின்னர் கொடுக்க வேண்டும்.


உப்பு

நாய்களுக்கு அதிக அளவில் உப்பு இருக்கும் உணவுகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அவை நாய்களின் உடலில் வறட்சியை ஏற்படுத்தும். மேலும் அதிக உப்புள்ள உணவுகள் உடல் வெப்பநிலையை உயர்த்தி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.