மயில்(Peacock)
இதன் அறிவியல் பெயர் Pavo Cristatus. 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறைவாயக தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைக் கொல்வது இந்தியாவில் சட்டவிரோதமானதாகும்.
ஆண்மயில் Peacock என்றும் பெண் மயில் Pea hen என்று அழைக்கப்படுகின்றன. என்றாலும் Peafowl என்பது பொதுப்பெயராக அழைக்கப்படுகிறது.
இது நெடுவால் வண்ணக்கோழி எனும் ஃபெசன்ஸ் (ஃபாஸியானிடே) என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தது. (கௌதாரி, காட்டுக்கோழி, கொண்டைச்சேவல்,ஸ்நகாக்கஸ் என்ற பறவை, ஃபெசன்ட்ஸ் போன்றவை இந்த குடும்பத்தில் வருகின்றன.)
சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மயிலுக்குப் பல பெயர்கள் உண்டு. வட மொழியில் 'மயூரா' என்கிறோம்.
உருது, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி, மராத்தி இவற்றில் 'மயூர்' என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக 'மோர்' என்று அழைக்கப்படுகிறது.