Author Topic: பாலிதீன் பைகளால் ஏற்படும் ஆபத்துகள்...!  (Read 694 times)

Offline kanmani

பாலிதீன் பைகளின் ஆபத்தைப் பற்றிய ஆங்கிலதளமொன்றில் இடம்பெற்ற வாசகம் ஒன்று:

Polythene chokes the drains, the water bodies, pollutes the land and poisons us slowly but surely. Wake up! There may still be time!

வணக்கம் நண்பர்களே..! சமீபத்தில் அரசு பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை தடைசெய்திருப்பது அனைவருக்கும் தெரியும். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்களின் புலம்பல்களை தினந்தோறும் கேட்க முடிகிறது. எனினும் நாட்டு நலன் கருதி எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி ஒரு சிலவற்றை நாம் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழலை மாசில்லாமல், மாசுபடுத்தாமல் விட்டுச்செல்வது நமது கடமையல்லவா? இவ்வாறு பாலிதீன் பைகளை அதிகம் பயன்படுத்தியே பழக்கப்பட்ட நண்பொருவருடனான உரையாடலை பகிர்ந்துள்ளேன்.

கேரிபேக் என்று சொல்லப்படும் பாலிதீன் பைகள் இல்லாமல் இன்று வாழ்க்கை நடத்துவது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹாயாக கையை வீசி கடைக்குச் சென்று வேண்டிய பொருள்களை கேரிபேக்கில் வாங்கி தொங்கவிட்டுக்கொண்டு வந்துவிடலாம். இப்போதெல்லாம் கடையிலும் கேரிபேக் பயன்படுத்தக்கூடாது என்று தடைசெய்துவிட்டார்கள். ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று நண்பர் சலித்துக்கொண்டார்.

எத்தனையோ தீயவைகள் இருக்கும்போது மக்களுக்குப் பயன்படும் பாலிதீன் பைகளை ஏன் தடை செய்ய வேண்டும்? என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசும்வரை காத்திருந்துவிட்டு அவருக்கு பதிலளித்தேன்.

Polythene-debris

நண்பா.. பாலிதீன் பைகள் என்பது பாலிதீன்(Polythene) எனும் வேதியியல் பொருளைக் கொண்டு உருவாக்கப்படுவை. இவற்றை மனிதன் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் உணவகங்களில்(HOTELS) உடனடி பார்சல் செய்து கொடுப்பதைக் குறிப்பிடலாம். கொதிக்க, கொதிக்க குழம்பு வகைகளை பாலிதீன் பைகளில் கட்டி அப்படியே தருகிறார்கள். கொதிக்கும் குழம்பின் சூட்டில் பாலிதீன் பையும் சற்று இளகி அதனுடைய வேதிப்பொருளும்(Chemicals) குழம்பில் கலந்துவிடுகிறது. இப்படி பாலிதீன் கவர்களில் வாங்கும் அத்தனை உணவுப் பொருட்களும் மாசுபட்ட பிறகே நாம் பயன்படுத்துகிறோம். பார்சல்களில் வந்த உணவுகளை உண்பவர்களுக்கும் வித விதமான நோய்களை உண்டுபண்ணுகிறது.

மண்வளம் மாசுபடுகிறது(Soil Pollution). உங்கள் கிராமத்தைச் சுற்றிப் பாருங்கள். நகரத்தைச் சுற்றிப் பாருங்கள்.. பரந்தவெளி எங்கும் நாம் பயன்படுத்திப் போட்ட வெற்று பாலீன் பைகளே சுற்றி ஆக்கிரமித்து இருக்கிறது. சுற்றி இருக்கும் வேலிமுள், புதர்கள் எங்கும் சிக்கித் தொங்கிகொண்டிருக்கும் அனைத்து பாலீதீன் பைகளும் நாம் பயன்படுத்தியவையே.

bagful of poison polythene

மழைக்காலங்களில் சாக்கடைநீர் நகரெங்கும் வியாபித்து பல கொடிய நோய்களைத் தரக் காரணம் இந்த பாலிதீன் பைகளைச் சொல்லலாம். பொறுப்பில்லாமல் நாம் பயன்படுத்திவிட்டு வீசிவிடும் இந்த பைகள் சாக்கடைக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரும்போது அவை சாக்கடைக் குழாய்களில் வழியாக செல்லமுடியாமல் வீதியெங்கும் பரவிவிடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு(Pollution) உண்டாகிறது. கடந்த முறை மும்பை நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முக்கியக் காரணம் இந்த பாலிதீன் பைகள்தான் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. காரணம் மழைநீர் முழுவதும் மண்ணுக்குள் இறங்காமல் இந்த பாலிதீன் பைகள் தடுகிறது. ஆறு, நதி, குளம், குட்டை என எல்லா நீர்நிலைகளிலும் பாலீதீன் பைகளே மிதந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மனிதர்களாகிய நாம்தான்.

bagful of poison polythene

இந்த பாலிதீன் பைகளைப் பற்றிய ஒரு உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 18 micron க்கு குறைவாக உள்ள பாலிதீன் பைகளை மறுசுழற்சி செய்ய முடியாது. . Use and throw வகை பிளாஸ்டிக் டம்ளர்களும்(Plastic Tembler) அப்படியே. மறுசுழற்சி செய்ய முடியாத அவைகளெல்லாம் நம்மைச் சுற்றியே கொட்டிக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட பாலிதீன்களின் மண்ணோடு மட்கும் காலம் எவ்வளவு தெரியுமா? சுமார் 400 ஆண்டுகள் ஆகும். அதாவது நான்கு தலைமுறைக்கும் இது அழியாமல் மண்ணிலேயே இருக்கும்.

பாலிதீன் பைகளில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களால் கற்பிணிகளுக்கு(Pregnant) புற்று நோய் ஏற்படும்.

a bagful of poison - polythene

இந்த பாலீதீன் பைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் நாம் என்ன செய்தோம்? தேவையானவைகளைப் பெற்றுவர, அதற்குத் தகுந்த பொருட்களோ, துணியாலான பைகளையோதானே பயன்படுத்தினோம். அதையே மீண்டும் பயன்படுத்தச் சொல்கிறது அரசு. அவ்வளவுதான் என விளக்கம் கொடுத்தேன்.

அதெல்லாம் சரிதான். உத்தரவு போட்டால் மக்கள் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்களா? உற்பத்தியையே தடுக்க வேண்டாமா? இதெல்லாம் வெறும் கண்துடைப்பு. சட்டம் போடுவார்கள். அந்த சட்டத்திற்கு மூலகாரணமாக இருப்பதை விட்டுவிடுவார்கள். மது அருந்தாதே என்று சொல்லி மதுவை(Alcohol) விற்பார்கள். ஊற்றிக்கொடுக்க ஊழியர்களையும் நியமிப்பார்கள். வித்தியாசமான அரசுகள். வித்தியாசமான சட்டங்கள். வித்தியாசமான மனிதர்கள்...