ஏன் கவலைப்படக்கூடாது. தெரியுமா?
உள்ளம் செய்யும் உற்பத்திகளில் எந்தப் பயனுமில்லாத கழிவுப்பொருள் கவலைதான்.
ஏன் அச்சப்படக்கூடாது. தெரியுமா?
நிகழக்கூடும் என்று நாம் அஞ்சுகிற பெரும் பாலான விஷயங்கள் நிகழ்வதேயில்லை.
மகிழ்ச்சிக்கு திறவுகோலே இல்லை. ஏன் தெரியுமா?
அதன் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.
உங்கள் வீட்டின் விலைமதிப்பில்லாத அம்சங்கள் என்ன தெரியுமா?
வீட்டில் இருக்கும் மனிதர்கள்தான். அப்போ அலுவலகத்தில்... அங்கேயும்தாங்க!!
தூக்கிச் செல்லக்கூடாத பெரிய சுமை. எது தெரியுமா?
அடுத்தவர்கள் மீதான வன்மம்.
உண்மை எது தெரியுமா?
உங்கள் அனுபவத்தில் உணர்வது.
நம்பிக்கை என்றால் என்ன தெரியுமா?
பதறக் கூடிய சூழலிலும் பதறாமல் இருப்பது.