Author Topic: யாகூ மின்னஞ்சல் முகவரி பாஸ்வேர்டுகளை திருடிய விஷமிகள்!  (Read 4648 times)

Offline Anu

இணைய தளங்களைத் திருடும் ஒரு சதிகாரக் கும்பல் மீண்டும் தனது அட்டுழிய வேலையை ஆரம்பித்திருக்கிறது. அதாவது யாகு மெயிலில் உறுப்பினர்களாக உள்ள 4,50,000 வாடிக்கையாளர்களில் இமெயில் முகவரிகள் மற்றும் பாஸ்வேர்டுகளை அந்த கும்பல் சமீபத்தில் திருடியிருக்கிறது. இந்த தகவலை யாகு நிறுவனமும் இப்போது உறுதி செய்திருக்கிறது.
இந்த நிகழ்வானது கண்டிப்பாக யாகு வாடிக்கையாளர்களைப் பாதிக்கும். எனவே அவர்களுக்குத் தமது மன்னிப்பைக் கோருவதாகவும் யாகு அறிவித்திருக்கிறது.
யாகு இமெயில் மற்றும் பாஸ்வேர்டுகளைத் திருடியவர்களை தாம் கண்டுபிடித்துவிட்டதாக சிநெட், ஆர்ஸ் டெக்னிக்கா மற்றும் மாஷபில் போன்ற இணைய தளங்கள் தெரிவித்திருக்கின்றன. அதாவது டி33டி என்ற நிறுவனமே இந்த காரியத்தை எஸ்க்யூஎல் இன்ஜெக்சன் மூலம்  செய்திருக்கிறது என்று அவைத் தெரிவித்திருக்கின்றன.
பதிவு செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளை இன்னும் சற்று கவனமாகப் பாதுகாத்து இருந்திருக்கலாம் என்று ஆன்லைன் பாதுகாப்பு அறிஞர் ஒருவர் கூறுகிறார்.
எனினும் திருடியவர்கள் அந்த பாஸ்வேர்டுகளை வைத்து தாங்கள் நினைத்தைதை சாதிக்க முடியாது என்ற தகவலும் வருகிறது. ஏனெனில் திருடப்பட்ட பாஸ்வேர்டுகளில் 5 சதவீதம் மட்டுமே இப்போது உபயோகத்தில் உள்ளன என்று யாகு அறிவித்திருக்கிறது.