Author Topic: வேர்க்கடலை சப்பாத்தி  (Read 1013 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 122
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வேர்க்கடலை சப்பாத்தி
« on: October 28, 2012, 11:29:13 AM »
வேர்க்கடலை சப்பாத்தி

தேவையானவை:
வேர்க்கடலை – கால் கப்,
கோதுமை மாவு – ஒரு கப்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
சின்ன வெங்காயம்,
காய்ந்த மிளகாய் – தலா 4,
சிறிய மாங்காய் துண்டு – 1,
உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்