Author Topic: சிக்கலில்லாமல் வாழ்க்கை இல்லை...  (Read 1724 times)

Offline JS

ஒரு பொருள் அறிய
ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தேன் !
ஒரு நிலையில் நான் இல்லை
பல நிலைகளை கடந்தேன் !

சொற்கள் தோன்றினாலும்
பொருள் தோன்றவில்லை என்னிடம்...
வலியை நான் கொண்டாலும்
மருந்து இல்லை என்னிடம்...

சிக்கலில் சிக்கி தவித்தேன்...
அது என்னை 'சீ' என்றது
மனம் நொந்து கிடந்தேன்
சிக்கலில்லாமல் வாழ்க்கை இல்லை
என்பதை உணர்ந்தேன்...

நிம்மதியை தொலைத்தேன்
அதை தேடி அலைந்தேன்
திரும்ப மனமில்லை
நிர்கதி ஆனேன்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

unarchiyana kavithai   ;)