உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 2
தக்காளி ப்யூரி - ஒரு தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி தழை - சிறிதளவு
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி வைக்கவும். இரண்டு பல் பூண்டை தட்டி வைக்கவும். மிக்சியில் தக்காளி, சிகப்பு மிளகாய், இரண்டு பல் பூண்டு, தக்காளி ப்யூரி எல்லாம் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த விழுதை ஊற்றவும்.
பின் உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வேக விடவும்.
கிழங்கு வெந்த பின் மல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான டொமேட்டோ ஆலு ரெடி.