தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, சிறிது மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், மீதமுள்ள மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக்கி, கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது போல் அனைத்தையும் செய்து கொள்ளவும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி!!!