Author Topic: தூறல்  (Read 611 times)

Offline Global Angel

தூறல்
« on: October 19, 2012, 04:41:02 PM »
மாலை நேரத்தின் மங்கிய ஒளி
மழை முகிலின் புனர்தலினால்
எங்கும் மெலிதாய் இருள்
எட்டி நடை போட்டுகொண்டிருந்தது ..
மாரி தவளைகளின்
மரணத்துக்கு முன் ஓசை
மண்டையை பிளந்து கொண்டிருந்தது ..
குளிரை குத்தகைக்கு எடுத்து -காற்று
உடலில் நடுக்கத்தை விதைத்துகொண்டிருன்தது ..
மௌனித்த மனங்களின்
முணுமுணுப்பு போல்
மழை நின்ற பின்னும்
அதன் தூறல்கள் தூவிகொண்டிருன்தது ..
மனதில் இல்லாத ஈரத்தை
மனதுக்கு வெளியே உணர முடிந்தது ...

பல விரக்திகளின் விளிம்பில்
வழிந்து கொண்டிருந்த
ஏக்கத்தின் குருதிகளில் 
தனிமை பேய் தாகம் தீர்துகொண்டது ..
எண்ணிலடங்காத ஆசைகளை
எளிதில் புதைத்துவிட்டுப்போன
இருதயம் இன்றோ நாளையோ
தன் இருப்பை இழக்க நினைத்த வண்ணம் ...

பல ஆயிரம் மயிலுகப்பால்
படர்ந்த  இதயம் -இன்று
பற்றி படர ஏதுமன்றி
பரிதவித்து படபடக்கின்றது
வெறுமைகளில் இன்ப
விதைகளை விதைத்தவனே
அதன் பசுமைகளை
அறுவடை செய்து போனது ஏனோ
விரக்திகளை மீண்டும்
விதைகாளாய் விட்டு ...

தூறல் நின்றிருந்தது
வெளியில் .....
                    

Aadava

  • Guest
Re: தூறல்
« Reply #1 on: October 20, 2012, 11:06:52 AM »
மழை மழை பெய்யுதே,,, இன்னும் மழைக் கவிதை யாரும் போடலயேன்னு கவனிச்சேன்... எழுதிட்டீங்க,

நல்லாருக்கு ஏஞ்சல்