Author Topic: அய்யன் திருவள்ளுவர் சிலை  (Read 3534 times)

Offline Global Angel

அய்யன் திருவள்ளுவர் சிலை




கன்னியாகுமரியிலுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை


இடம் :                 கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
வடிவமைப்பாளர் :   கணபதி (சிற்பி)
வகை :   சிலை
Material :   பாறை மற்றும் பைஞ்சுதை
உயரம் :   40.5 metres (133 ft)
துவங்கிய நாள்    : செப்டம்பர் 6, 1990
முடிவுற்ற நாள் :   1999
திறக்கப்பட்ட நாள் :   சனவரி 1, 2000


அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது

சிலை அமைப்பு

    * திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.

    * சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    * பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

    * மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன

சிலை குறிப்புகள்

   1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி
   2. சிலையின் உயரம் - 95 அடி
   3. பீடத்தின் உயரம் - 38 அடி
   4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681     
         கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
   5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்
   6. சிலையின் எடை - 2,500 டன்
   7. பீடத்தின் எடை - 1,500 டன்
   8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்


சிலை அளவுகள்

   1. முக உயரம் - 10 அடி
   2. கொண்டை - 3 அடி
   3. முகத்தின் நீளம் - 3 அடி
   4. தோள்பட்டை அகலம் -30 அடி
   5. கைத்தலம் - 10 அடி
   6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
   7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
   8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: அய்யன் திருவள்ளுவர் சிலை
« Reply #1 on: October 17, 2012, 03:34:08 PM »
தகவலுக்கு நன்றிங்க, பல விடயங்கள் நான் அறியாதவை
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: அய்யன் திருவள்ளுவர் சிலை
« Reply #2 on: October 17, 2012, 03:38:38 PM »
நமக்கு மட்டும் தெர்யுமா .. ;D. நல்ல விசயங்கள பரி மாறி கொள்வதுதனே .. நீங்க கூட பரிமாறி கொள்ளலாமே இங்கும் ...
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: அய்யன் திருவள்ளுவர் சிலை
« Reply #3 on: October 17, 2012, 03:41:19 PM »
பரிமாறிடுவோம் :D
அன்புடன் ஆதி