Author Topic: காதலன்  (Read 1743 times)

Offline Global Angel

காதலன்
« on: October 16, 2012, 07:06:28 PM »
அந்தி வானத்தின்
ஒளிப் பிழம்பை எல்லாம்
அருவமாய் அமர்ந்து
இருள் உறிஞ்சும்
மாலைக்கு அடுத்த பொழுது ..
மன வீட்டுக்குள்
பல மகரந்தங்கள் கருக்கொள்ளும்
மந்தகார பொழுது
மயக்கங்களையும்
கிறக்கங்களையும்
அள்ளி தெளிக்கும்
மருள் பொழுது ....

அடுத்தடுத்து வரும்
மெகா சீரியலில்
மனங்கள் எல்லாம்
மௌனித்து மயங்கி நிற்க
இவள் மனது மட்டும்
அந்த இனிய பொழுதுக்காய்
ஏக்கத்துடன் காத்திருந்தது ...

நிமிடத்துக்கு ஒரு தடவை
இல்லை வினாடிகளுக்குள் பலதடவை
பாய்ந்து மீண்டது கண்கள்
படிகட்டுகளில் பரிதவிப்போடு
மணி எட்டடித்து ஓய்ந்தது
எதோ ஓர் சலசலப்பு
உட்கார்ந்திருந்தவள் மனதில்
உலைகளத்தின் தகிதகிப்பு

தன்னை மறந்து
தட தடத்து துடிதுடித்த
மனதை கைபிடித்து அடக்கியவண்ணம்
விரைந்து வந்தாள்..
மொட்டை மாடியும்
அவள் கண்ணுக்கு
மொட்டையாய் தெரிந்தது சிலகணம்
வந்த வேகத்தின் நிலை தாளாமல்
எம்பி தணிந்த மார்பும்
ஏக்கம் கலந்த கண்களும்
இங்கும் அங்கும்
தேடி சலித்து .....

சட்டென மூர்க்கம்
அவள் தாவணி தீண்டியது
மூர்க்கமாய்
பெண்மையின் முகவரிகள் தேடியது ...
ஏக்கமாய் சில இடதில்
தேக்கங்கள் புரிந்தது ...
முழுமைகள் காத்த
முந்தானை ..
முணுமுணுத்து சரிந்தது ..
பெண்மைக்கான கூச்சம் தாக்க
"ச்சே விடு  சுத்த மோசம் "
இயல்பாய்  வந்துவிட
கண நேர அமைதி ..
கோபம் வந்துவிட்டதோ ...
திரும்பியவள் கண்களில்
எதுமே தென்படவில்லை..

ஏக்கங்கள் குடிபுகுந்து
ஏந்திலையை வாட்ட
இதய துடிப்பு
எகுறி குதித்து எழுப்பிய ஓசையில்
ஏதுமறியாது ஏங்கி  தவித்தது மனது

மென்மைகளை திரட்டி
கன்னங்களை  தீண்டிய கரம் ஒன்று
கழுத்து வழி இறங்கி
காதல் குன்றுகள் நோக்கி பயணம் தொடர..
இதை எட்டி நின்று பார்த்து ரசித்த
மதியும் மதி கெட்டு மனம் தளும்பி
முகில் கொண்டு முகம் மூடி
அவன் மோகம் தணிக்க
முழுவதுமாய்  முயன்று மறைந்தான் ..
நாணம் கெட்ட நங்கையின்
நிலை கண்டு
ஓரமாய் ஓங்கி நின்ற
சவுக்கு மரத்தின் இலைகளும்
சல சலத்து சிரித்து
இருள் இழுத்து மறைத்து கொண்டது ...

இதை பார்த்த இவள்மனதும்
கள்ளுண்ட மலராகி
கவிந்து குவிகையில்
எங்கோ ஒரு குரல்
எட்டி ஒலிக்க...
தனிலை கண்டவள்
தடுமாறி தாவணி சரி செய்து
தடம் மாறி இடம் மாறி
தத்தளித்து நிமிர்கையில்
இன்னும் அவன் கரத்தில்
இயல்பாய் சிக்கிகொண்ட
தாவணி வர மறுத்தது ..

நாளை வருகிறேன்
நயமான உச்சரிப்போடு
உவப்பற்ற உவகை அற்ற
உள்ளத்தோடு  எட்டி நடந்தாள்
ஏக்கத்தை சுமந்தபடி ..

நாளை வருவானா..
சந்தேகந்தின் சாயல்
சடுதியாய் சலனங்களை உரசிய பொது
உள்ளே ஓர் குரல்
ஓங்கி ஒலித்தது ..
அடி போடி
ஓடி போக அவன் என்ன
மானுட  காதலனா ...?
தென்றல் காதலன்
தினமும் வருவான்
உன் இன்பம் திகட்டும் வரை ...
« Last Edit: October 16, 2012, 07:36:05 PM by Global Angel »
                    

Offline Gotham

Re: காதலன்
« Reply #1 on: October 17, 2012, 10:29:45 PM »
வர்ணனைகள் உங்களுக்கு மிக சரளமாக வருகிறது. அவளின் நிலையும் அந்திம வேளையில் அலைபாயும் மனதும் தெளிவாய் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது


மதிகெட்ட மதி முகிலிழுத்து முகம் போர்த்த..


இடம் மிக மிக அருமை...


ஏனோ தெரியவில்லை. அதீத வர்ணனைகள் தழுவும் காதலனும் தென்றற்காற்று என்றே என் மனதில் ஒலிக்க வரிகளைப்படித்தேன். அதனால் கன்னியவளின் நாணங்கள் காதலன் நினைவில் கொண்டாள ஊடுருவும் தென்றலிடம் என்ற எண்ணம் தோன்றியே படித்ததால் அந்த இறுதிப்பத்தி ஏனோ மனதில் நிற்கவில்லை. :(


அதுவரை கவிதை மிக மிக அழகு. தென்றலை பெண்ணாக உருவகப்படுத்தி படித்திருக்கிறேன். இங்கே ஆண். அருமை.

Offline Global Angel

Re: காதலன்
« Reply #2 on: October 18, 2012, 12:30:19 AM »
ஹஹா  கோதம் .. நன்றிகள் ... நீக எல்லாம் கவின்கர்கள்  கவிதைன் போக்கை வைத்தே கண்டு பிடித்து விடுவீர்கள் ... எனன் பண்ண முடியும் .. ஹிஹி  மீண்டும் நன்றிகள்  :D
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதலன்
« Reply #3 on: October 18, 2012, 02:56:30 PM »
அணைய போகிற தீபம் பிரகாசமா எரியும் என்று சொல்வார்கள், அப்படித்தான் அந்திம சூரியனும், சுள்ளென்று அடிக்கும், அதனை மிக அழகா சொல்லியிருக்கீங்க, அந்த சுள்ளொளியை கவிய காத்திருக்கும் இருள் உறுஞ்சுவதாக சொல்லியிருக்கீங்க, அதை கூட சும்ம சொல்லல, அருவமாய் அமர்ந்து இருள் உறிஞ்சும்னு சொல்லியிருக்கீங்க, க்ளாஸ்

//அந்தி வானத்தின்
ஒளிப் பிழம்பை எல்லாம்
அருவமாய் அமர்ந்து
இருள் உறிஞ்சும்
//

இதே பத்தில், பயன்படுத்தப்பட்டிருக்கும், மந்தகாரம் மற்றும் மருள் போன்ற வார்த்தைகள், புதுமையானவையும் கூட‌


//நிமிடத்துக்கு ஒரு தடவை
இல்லை வினாடிகளுக்குள் பலதடவை
//

எதிர்ப்பார்ப்பை விவரணை செய்தவிதம் சிறப்பு, வினாடிக்கு பல முறை 100% உண்மையான வரி

//மொட்டை மாடியும்
அவள் கண்ணுக்கு
மொட்டையாய் தெரிந்தது சிலகணம்
வந்த வேகத்தின் நிலை தாளாமல்
எம்பி தணிந்த மார்பும்
ஏக்கம் கலந்த கண்களும்
இங்கும் அங்கும்
தேடி சலித்து .....
//

வெறுமையை ஏக்க பெருமூச்சை, ஏமாற்றத்தை எல்லாம் ஒரே பத்தியின் அடக்கியிருக்குறீகர்கள்

//சட்டென மூர்க்கம்
அவள் தாவணி தீண்டியது
மூர்க்கமாய்
பெண்மையின் முகவரிகள் தேடியது ...
ஏக்கமாய் சில இடதில்
தேக்கங்கள் புரிந்தது ...
முழுமைகள் காத்த
முந்தானை ..
முணுமுணுத்து சரிந்தது ..
பெண்மைக்கான கூச்சம் தாக்க
"ச்சே விடு  சுத்த மோசம் "
இயல்பாய்  வந்துவிட
கண நேர அமைதி ..
கோபம் வந்துவிட்டதோ ...
திரும்பியவள் கண்களில்
எதுமே தென்படவில்லை..

//

ச‌ர‌ச‌ம் தானோ என்று யோசிக்க‌ வைக்க‌ முய‌ன்று தேடிய‌து, தீண்டிய‌து எனும் அஃறிணை குறிப்பு அது காத‌ல‌ன் இல்லை என்ப‌தை சொல்லிவிடுகிற‌து

ஆனால் வ‌ர்ண‌னை மிக‌ சிற‌ப்பாக‌ இருக்கிற‌து

//மென்மைகளை திரட்டி
கன்னங்களை  தீண்டிய கரம் ஒன்று
கழுத்து வழி இறங்கி
காதல் குன்றுகள் நோக்கி பயணம் தொடர..
இதை எட்டி நின்று பார்த்து ரசித்த
மதியும் மதி கெட்டு மனம் தளும்பி
முகில் கொண்டு முகம் மூடி
அவன் மோகம் தணிக்க
முழுவதுமாய்  முயன்று மறைந்தான் ..
நாணம் கெட்ட நங்கையின்
நிலை கண்டு
ஓரமாய் ஓங்கி நின்ற
சவுக்கு மரத்தின் இலைகளும்
சல சலத்து சிரித்து
இருள் இழுத்து மறைத்து கொண்டது ...
//

இதுவும் மிக‌ சிற‌ப்பு, காத‌ல் குன்று புது சொல்லாட‌ல்

ம‌திகெட்ட‌ ம‌தி சூப்ப‌ர்

//இதை பார்த்த இவள்மனதும்
கள்ளுண்ட மலராகி
கவிந்து குவிகையில்
எங்கோ ஒரு குரல்
எட்டி ஒலிக்க...
தனிலை கண்டவள்
தடுமாறி தாவணி சரி செய்து
தடம் மாறி இடம் மாறி
தத்தளித்து நிமிர்கையில்
இன்னும் அவன் கரத்தில்
இயல்பாய் சிக்கிகொண்ட
தாவணி வர மறுத்தது ..

நாளை வருகிறேன்
நயமான உச்சரிப்போடு
உவப்பற்ற உவகை அற்ற
உள்ளத்தோடு  எட்டி நடந்தாள்
ஏக்கத்தை சுமந்தபடி ..

நாளை வருவானா..
சந்தேகந்தின் சாயல்
சடுதியாய் சலனங்களை உரசிய பொது
உள்ளே ஓர் குரல்
ஓங்கி ஒலித்தது ..
அடி போடி
ஓடி போக அவன் என்ன
மானுட  காதலனா ...?
தென்றல் காதலன்
தினமும் வருவான்
உன் இன்பம் திகட்டும் வரை ...//


அழ‌காய் நக‌ர்த்தி சென்று க‌டைசியில் ஏமாற்ற‌ முய‌ன்றிருக்குறீர்க‌ள், ஹி.. ஹி..

முன்பே நீங்க‌ள் கொடுத்த‌ குறிப்ப சரியாய் க‌ண்டு கொண்ட‌வ‌ர் கோத‌ம் போல‌ முடிவுக்கு வ‌ந்துவிடுவ‌து உண்டு


மற்றவர்கள் எல்லாம் எதிர்ப்பார்ப்போடு கவிதைக்கு பயணித்து ஏமாறுவந்து உறுதி

கவிதை சற்று நீண்டதுதான் எனினும் வார்த்தைகளை கையாண்ட விதத்தில் வாசகன் தொய்வுறாமல் படிக்க்கும் வகையில் நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்

வ‌ர்ண‌னைக‌ள் மிக‌ அற்புத‌ம், அது உங்க‌ளுக்கு அநாசிய‌மான‌ கைவ‌ருவ‌தை ப‌ல‌ க‌விதைக‌ள் க‌வ‌னித்து இருக்கீறேன்

தென்றலே என் த‌னிமை க‌ண்டு நின்று போய்விடு என்று சொன்ன‌து இத‌னால் தானோ

க‌ண்ணதாச‌ன் க‌விதா தேவிக்கு எழுதிய‌ க‌விதையும் நினைவுக்கு வ‌ந்த‌து, பாராட்டுக்க‌ள்





அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: காதலன்
« Reply #4 on: October 19, 2012, 01:57:22 PM »
ஹஹா நன்றிகள் ஆதி ... கவிஞ்சர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் ...... நான் என்ன பண்ண .... மற்றைய வாசகர்கள் ஹிஹி .. நிச்சயமா த்ஹிட்டி இருப்பாங்க .. கவுதுட்டாலேன்னு ..... நன்றிகள் ஆதி இந்த கவிதை 3 வருடங்களுக்கு முன்பு  வீறு ஒரு இடத்தில பதிவிட்டேன் .... அதை மேலும் மெருகூட்டி இங்கு பதிவிட்டேன் ... நன்றிகள் ....

மீண்டும் அனைவர்க்கும் நன்றிகள்
                    

Aadava

  • Guest
Re: காதலன்
« Reply #5 on: October 20, 2012, 11:16:25 AM »
கவிதை நல்லாஇருக்குங்க ஏஞ்சல்.

Offline Dong லீ

Re: காதலன்
« Reply #6 on: October 28, 2012, 03:40:58 PM »
 கவிதை நல்லா இருக்கு

Offline Global Angel

Re: காதலன்
« Reply #7 on: October 28, 2012, 05:28:19 PM »
thanks all  ;)
                    

Offline ! SabriNa !

Re: காதலன்
« Reply #8 on: October 29, 2012, 04:20:08 PM »
super ah picturize pannirukel..angel..nice one!!


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: காதலன்
« Reply #9 on: October 30, 2012, 12:34:44 PM »

மதிகெட்ட மதி முகிலிழுத்து முகம் போர்த்த..




இது ஏன் இவருக்கு பிடிச்சிருக்கு  ???  :D

அழகான கவிதை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: காதலன்
« Reply #10 on: October 30, 2012, 01:55:33 PM »
thanks all :P
                    

Offline kanmani

Re: காதலன்
« Reply #11 on: November 05, 2012, 02:31:18 PM »
global ..

..ஏக்கங்கள் குடிபுகுந்து
ஏந்திலையை வாட்ட
இதய துடிப்பு
எகுறி குதித்து எழுப்பிய ஓசையில்
ஏதுமறியாது ஏங்கி  தவித்தது மனது

மதிகெட்ட மதி முகிலிழுத்து முகம் போர்த்த..

இதை பார்த்த இவள்மனதும்
கள்ளுண்ட மலராகி
கவிந்து குவிகையில்
எங்கோ ஒரு குரல்
எட்டி ஒலிக்க...




alagana varigal ..

enaku  ipodhaan kavidhai padika aasaiyae vandhiruku  ..

ungaludaiya kavidhaila  pechu valakil irundhu ( idhai yeppadi kuruipiduvadhu endru kooda enaku theriyavillai) maraindhu pona pala alagiya sorkal kaana mudigiradhu .. vaalthukkal global

Offline Global Angel

Re: காதலன்
« Reply #12 on: November 05, 2012, 07:47:34 PM »
haha kannu thanks .. ;) kannuku idly parcel plz