//இரவின் நிசப்தத்தை
இருள் உறிஞ்சிகொன்டிருந்தது
எட்டாத உயரத்தில்
எட்டி பார்த்தவண்ணம்
ஓர் ஆந்தை
ஓயாமல் அலறிகொண்டிருன்தது
தூரத்தில் ஓர் நாய்
துக்கம் கலந்து
துயரம் செறிந்து ஊளை இட்டவண்ணம் ...
//
அபசுரத்தில் அலரும் ஆந்தையும்
அகலாத்தில் அழும் நாயும்
மங்கலமற்ற ஒரு தருணத்தின் குறியீடோடு ஆரம்பமாகும் கவிதை
//கருப்பு வெளிக்குள்
புள்ளிகளாய்
பூசிகளின் மினு மினுப்பு
அண்ணாந்து பார்த்தால்
அண்ட வெளியில்
அள்ளி தெளித்த நட்சத்திரங்கள்
ஒளி மங்கி இருள் விளக்காய்
நிலவை தேடி ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன ...
//
விண்மீகள் மீதும்
மின்மினிகள் மீதும்
படர்ந்து நிலையற்றமையை விளக்கி
//ஒற்றையாய் பனைமரம்
ஓங்கி வளர்ந்து
திரும்பும் போதெல்லாம்
திடுக்கிட செய்து கொண்டிருந்தது
அடிகடி உரசி சென்ற காற்று
அதன் அலசலில் ஆடிய மரங்கள்
நெஞ்சு கூண்டில்
பீதியை புசித்துக் கொண்டிருன்தது ....
//
தனிமையின் கனத்த குயீடாய் உயர்ந்து நிற்கும் ஒற்றை பனைமரத்தை வளர்த்து
பெருங்காற்றில் தலை விரி கோலமாய் ஆடும் இராக்கால மரங்களின் ஆடத்தில் பீதியை உட்புகுத்தி
//அடுப்பங்களையில் அடிகடி
உருண்டு புரளும் பாத்திரங்கள்
சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அமைதியை கிளறி ஆர்பரிப்பு செய்வது போல்
மன கூண்டின்
தைரியத்தை சீண்டி
பீதியை புரண்டு ஓட செய்துகொண்டிருந்தது ...
//
அமானுஸ்யத்தை உள் நுழைத்து
அச்சகரமான பொழுதன்றாய் மாறி
//ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரோரம்
ஒருக்களித்து உக்காந்து
உச்சமாய் பல்லி
இசுசு இச்சு என்ற போது
மன பயம் பிச்சுக்கொண்டு போனது ...
//
பல்லி ஒன்றி துணையோடு அவமங்கலம் பேசி, மரணத்தின்
நினைப்பொன்றை சீண்டி
//அய்யஹோ...
ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...//
பயங்கரங்களால் சூழப்பட்ட தனிமையோடும்
மிக வெகமாய் துடிக்கும் இதயத்தில்
இரத்ததோடும் பாயும் பயத்தோடுமானதாய்
அந்த துயர்மிக்க பீதியான பொழுதின்
கோரத்தை வர்ணித்த விதம் நன்று
ஒற்றை பனைமரம் தனிமைக்கான சரியான குறியீடு அதற்காகவே ஒரு சிறப்பு பாராட்டுக்கள்
முழுக்க முழுக்க அவமங்கலங்க குறயீடுகளால் பின்னி, தருணத்துக்கும், சூழலுக்கும், இடத்துக்கு அவற்றை பொருந்த சொல்லிய இடங்களையும் பாராடியே ஆகவேண்டும்
கனமான கணத்தை கனமாக க(கா)ட்டிய கவிதை, பாராடுக்கள்
//ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...//
இந்த வரியை உங்க அனுமதியோடு என் குடும்ப சண்டையை சரி செய்ய பயன்படுத்திக்கிறேன்
நீங்க தான் சமாதானம் செய்ய வர மாட்டேனு சொல்லிட்டீங்க, உங்க கவிதை வரியாவது வரட்டுமே

பாராட்டுக்கள்