தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது)
முட்டை கோஸ் - 1 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
புதினா - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவ வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும், அதில் கழுவிய காளானை போட்டு, வடிகட்டி விடவும். பின் அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா தூள், சேர்த்து கிளறவும். பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், காளான், முட்டை கோஸ், மல்லி, புதினா மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கள் அனைத்தும் வதங்கியதும், அதில் சாதத்தை போட்டு நன்கு கிளறவும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, உப்பை சரிபார்த்து, ஒரு முறை பிரட்டி, 3-4 நிமிடம் தட்டை வைத்து மூடி, தீயை குறைவில் வைத்து, பிறகு இறக்கவும்.
இப்போது சுவையான மஸ்ரூம் ரைஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும்.