தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
கடலை மாவு - 1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்
கார்ன் ப்ளார் - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - சிறிது (வேண்டுமென்றால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, மைதா மாவு, கார்ன் ப்ளார் மற்றும் அரிசி மாவை போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின் காலிப்ளவரை சிறிதாக நறுக்கி, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அலசி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள மாவை தூவி, இஞ்சி பூண்டு விழுது, அஜினோமோட்டோ, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கேசரி பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர்த சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, காய வைத்து, அதில் அந்த காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான காலிஃபள்வர் வறுவல் ரெடி!!!