Author Topic: கடலைப் பருப்பு ஸ்வீட்  (Read 825 times)

Offline kanmani

கடலைப் பருப்பு ஸ்வீட்
« on: October 15, 2012, 10:37:15 PM »
தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
மைதா மாவு - 1 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி பொடி - சிறிது
பாதாம் பொடி - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை கால் மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை குக்கரில் வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மிக்ஸியில் அரை கப் சர்க்கரையை போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோவா, ஏலக்காய் தூள் போட்டு, கைகளில் நெய் மற்றும் சோடா உப்பை தடவிக் கொண்டு, இவற்றை நன்கு வடை போன்று தட்டிக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ளவற்றை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவுத் தண்ணீரை ஊற்றி, 2 1/2 கப் சர்க்கரையை போட்டு, கம்பிப் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி, அதில் பொரித்தவற்றை போட்டு எடுத்து, சர்க்கரைப் பொடி, முந்திரி பொடி, பாதாம் பொடி மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றில் போட்டு பிரட்டி எடுத்து, தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பின் அதன் மேல் உலர்ந்த திராட்சையை வைத்து அலங்கரித்து பரிமாறவும்