Author Topic: ரவை இட்லி  (Read 720 times)

Offline kanmani

ரவை இட்லி
« on: October 14, 2012, 10:51:13 PM »
தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
தயிர் - 1 கப் (சற்று புளித்தது)
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
சோடா மாவு - 1 சிட்டிகை
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, காய வைத்து, ரவையை போட்டு வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாறியதும், தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் சோடா மாவு சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அந்த ரவை கலவையோடு சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி பதத்திற்கு கரைத்து, ஒரு 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லிப் பாத்திரத்தில் அந்த மாவை இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான ரவை இட்லி ரெடி!!! இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.