Author Topic: மஸ்ரூம் சில்லி நூடுல்ஸ்  (Read 950 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 2 பாக்கெட் (400 கிராம்)
காளான் - 10 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
குடை மிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

பின் அதில் 2 பாக்கெட் நூடுல்ஸை போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதில் உள்ள நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு, உருகியதும், நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதில் வினிகர் மற்றும் சோயா சாஸை விட்டு, மறுபடியும் 2 நிமிடம் வேக வைக்கவும்.

பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மூடி போட்டு தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயிலை ஊற்றி, காய வைத்து, அதில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துஇ பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, குடை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு, 3-4 நிமிடம் நன்கு கிளறவும். கிளறியப் பின் அதில் காளான் மற்றும் உப்பை சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

இப்போது மஸ்ரூம் சில்லி நூடுல்ஸ் ரெடி!!!