{ புத்தம் புதியதாய் நம் மன்றதினில் மலர்ந்திருக்கும்
ஓர் மலேய, மலர்களின் இளவரசிக்கு
மலர்கிரீடமாய் இந்த கவிக்கிரீடம் அர்ப்பணம் ..!}
தொலைதூர உறவே !
என் இதயத்தினில் இனிதாய் உறவாடும்
தொலைதூர உறவே !
என் உயிருக்கான உயர் ஒப்பீடான
ஒப்பில்லா உருவே !
பல ஆயிரம் மைல் கடந்து கண்ணாலன்
நீ இருந்த பொழுதும் , மயிலிவள்
மனதினை மயக்கி, மையல் கொண்டிடும்
மன்மத திருவே !
உன்னிடமிருந்தெனை பிரித்து வருத்தும்
நேரமதை விட, கொடுமையானது
தொட்டுவிட முடியாவிட்டாலும்
பார்க்கவும் வாய்ப்பளிக்காத தூரமே !!
வெள்ளை நிலா - நீலக்கடல்
சூரியன் - தாமரை
தென்றல் - மலர்கள்
மலையுச்சி - மண்தரை
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !
தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம் என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !