Author Topic: ஒரு வார்த்தை  (Read 980 times)

Offline viswa

ஒரு வார்த்தை
« on: September 28, 2012, 04:14:49 PM »
தமிழில் எவ்வளோ வார்த்தைகள் இருக்கிறது.
ஆனால்,
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான்
எனக்கு பிடிக்கும் !

என்னை
ரசிக்க வைப்பதும்
சிரிக்க வைப்பதும்
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான் !

என்னை
கண் மூட வைப்பதும்
கனவு காண வைப்பதும்
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான் !

என்னை
உறங்க வைப்பதும்
கிறங்க வைப்பதும்
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான் !

என்னை
பட்டாம்பூச்சி போல்
பறக்க வைப்பதும்
பட்டத்தின் வால் போல்
துடிக்க வைப்பதும்
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான் !

நீ இல்லாத தனிமையில்
என்னை
எண்ணிப்பார்க்க வைப்பதும்
சொல்லிப்பார்க்க வைப்பதும்
நீ சொல்லும் - அந்த
ஒரு வார்த்தைதான் !!

இதுவே என் வரமடி கண்ணே...!
இன்னும் ஒரு முறை சொல்லடி பெண்ணே..!! :) :) :)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: ஒரு வார்த்தை
« Reply #1 on: September 28, 2012, 04:32:26 PM »
தோழர் விஸ்வா

இது தங்களின் சொந்த ஆக்கமா ? தங்களுக்கு பிடித்த கவிதைகளை பகிர்ந்து கொள்குறீர்களா ?

சொன்னால் அதற்கு ஏற்றார் போல பின்னூட்டமிட வசதியாய் இருக்கும்
அன்புடன் ஆதி

Offline viswa

Re: ஒரு வார்த்தை
« Reply #2 on: September 28, 2012, 05:04:50 PM »
தோழர் ஆதி ,
 
  என் சொந்த கவிதை படைப்பு பகிர்ந்து கொள்கிறேன் .....

Offline Gotham

Re: ஒரு வார்த்தை
« Reply #3 on: September 28, 2012, 05:06:38 PM »
அந்த வார்த்தை அவள் சொல்லும் 'போடா' தானே?

Offline Global Angel

Re: ஒரு வார்த்தை
« Reply #4 on: September 28, 2012, 05:08:25 PM »
லூசாட நீ  அதுவா கூட இருக்கலாம் கோதம்  ;D
                    

Offline Gotham

Re: ஒரு வார்த்தை
« Reply #5 on: September 28, 2012, 06:00:21 PM »
லூசாடா நீ - இருவார்த்தை கு.ஏ