உயிர் கொடுத்தவள்!..உதிரம் கொடுத்தவள்!
இந்த உடல் என்னும் வரம் கொடுத்தவள்!
சுமையை சுகமாக சுமந்து மகனாய் பெற்றெடுத்தவள்!
பூவாய் நான் சிரிக்க பூமிக்குள் வேராக இருந்தவள்!
தன்னலம் கழற்றி எரிந்து என் நலம் மட்டும் எண்ணியவள்!
இன்று எட்டாத தூரத்தில் சென்று விட்டால்!
சென்றாலும் செவிக்கு தேனாய் என் மனதிற்கு மகிழ்ச்சியாய்
தோல் கொடுக்க தோழனாய் அவளின் தாலாட்டு!!!