இரவில் வந்தால்
இனிதாய் இருக்கும்
பல அம்மாக்களின் நினைப்பு இது ...
பகலில் வந்தால்
இனிதாய்
இருக்கும் பள்ளிச் சிறார்களின்
நினைப்பு இது...
ஓங்கி அடித்து ஓயலாம் அல்லவா ?
பலரின் நினைப்பு இது!
வந்தாலும் குறை!
வராவிட்டாலும் குறை!
நான் வரா விட்டால் திட்டுபவர்கள்
வந்தால் எப்போது
நிற்குமோ என்று சலிப்பு அடைகிறார்கள் ..
என் செய்வேன் நான்?
நான் வர வேண்டுமா
வேண்டாமா ?
வருத்தத்துடன் மழை !
