Author Topic: இய‌ற்கையும் க‌தை பேசும்  (Read 653 times)

Offline தமிழன்

இய‌ற்கையும் க‌தை பேசும்
« on: September 27, 2012, 01:07:10 PM »
 கடல்

கடலுக்கு அப்படி என்ன தான்
ரகசியம் இருக்கிறதோ
கரையுடன் ஓயாமல்
கதை பேசிக் கொண்டிருக்கிறது


      காற்று
காற்று எதிர் வரும் அனைவரையும்
கட்டித் தழுவி
தன் குறையை
புலம்பிவிட்டு போகிறது


      ஆறு

ஆறு த‌ன் க‌ட‌ல் காத‌ல‌னை
சந்திக்க‌ப் போகும்
ச‌ந்தோஷ‌த்தை
வெட்க‌மில்லாம‌ல் வ‌ழியெங்கும்
பீத்திக்கொண்டு போகிற‌து



       பூமிபூமி வ‌ச‌ந்த‌த்தில்
தன் ர‌க‌சிய‌த்தையெல்லாம்
ம‌ண‌மும் வ‌ர்ண‌முமாக‌
இய‌ற்கையுட‌ன் பேசித் தீர்க்கிற‌து

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: இய‌ற்கையும் க‌தை பேசும்
« Reply #1 on: September 27, 2012, 01:29:13 PM »
இச்சை கொள்ளவைக்கும் இயல்பான வரிகள் !!

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: இய‌ற்கையும் க‌தை பேசும்
« Reply #2 on: September 27, 2012, 01:34:25 PM »
//  ஆறு

ஆறு த‌ன் க‌ட‌ல் காத‌ல‌னை
சந்திக்க‌ப் போகும்
ச‌ந்தோஷ‌த்தை
வெட்க‌மில்லாம‌ல் வ‌ழியெங்கும்
பீத்திக்கொண்டு போகிற‌து
//

இதனை மிக ரசித்தேன் தமிழன், மற்றவை பழையவை தான்

பூமி மட்டும் பொருந்தவில்லை தமிழன்

இயற்கையை பற்றி எல்லா கவிஞரிடமும் பல கவிதைகள் இருக்கும், அப்படி இருக்க இது போன்ற கவிதைகளை இன்னும் புதுமையாய் எழுத முயன்றால் அன்றி நம் கவிதை தனித்து தெரியாது தமிழன்

ஆறு போல புதுமை அனைத்தலும் இருந்தால் நலம், வாழ்த்துக்கள்
அன்புடன் ஆதி