Author Topic: மெய் எனும் பொய்  (Read 602 times)

Offline தமிழன்

மெய் எனும் பொய்
« on: September 26, 2012, 11:54:46 PM »
உலகமே ஒரு நாடக மேடை
மனிதர்க‌ள் எல்லோரும் ந‌டிக‌ர்க‌ள்
ஏமாளியாக‌ கோமாளியாக‌
ஏமாற்றுப‌வ‌னாக‌ ஏமாறுப‌வ‌னாக‌
ப‌ண‌க்கார‌னாக‌ ப‌ர‌தேசியாக‌
எத்த‌னை எத்த‌னை வேஷ‌ங்க‌ள்

இய‌ற்கை ந‌டிக‌ர்க‌ளில் சில‌ருக்கு
செய‌ற்கையாக‌ ந‌டிப்ப‌த‌ற்கு
தேசிய‌ விருது ஆஸ்கார் விருது
இது வேடிக்கையாக‌ இல்லை

என்ன‌ ப‌த‌வி இருந்தென்ன‌
பட்டம் இருந்தென்ன‌
நாடகம் முடிந்து வேசம் கலையும் போது
எல்லோருக்கும் பிணம் எனற‌
ஒரு பட்டம் தான்

பொய்யாக வாழ்ந்து
பொய்யாக மடியும் உடம்புக்கு
மெய் என பெயர் வைத்தவன் யாரடா

Offline Anu

Re: மெய் எனும் பொய்
« Reply #1 on: September 27, 2012, 06:54:40 AM »


பொய்யாக வாழ்ந்து
பொய்யாக மடியும் உடம்புக்கு
மெய் என பெயர் வைத்தவன் யாரடா

arumaiyaana kavithai.
karuthulla kavithai thamizhan.


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: மெய் எனும் பொய்
« Reply #2 on: September 27, 2012, 12:43:13 PM »
கடைசி வரிதான் கவிதையே, மற்ற வரிகள் ஆற்றமையின் வெளிப்பாடு, முதல் பத்தில் வேறு விதமாய் இருந்திருக்கலாம் தமிழன்

கடைசி வரியை நோக்கியே மற்ற வரிகள் பயணம் செய்திருக்கின்றன, செய்த பயணம் சரியாக முடிந்திருக்கிறது

ஆதி தமிழன் மிக தெளிவானவன், மெய் எந்த மரியாதையுமில்லை என்பதை இலக்கணத்திலேயே சொல்லிவிட்டான்


மெய்யாக வாழ்த்து
மெய்யாக மடியும் உடம்புக்கு
மெய்யென்றே பெயர் வைத்தான்

மெய்யே கோயில் மனமே தெய்வம்

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

இதையும் சொன்னது தமிழன் தான்

தொடர்ந்து எழுதுங்கள் தமிழன், கவிதை சிறப்பாக இருக்கிறது
அன்புடன் ஆதி