Author Topic: தலைப்பற்ற கவிதை  (Read 1135 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
தலைப்பற்ற கவிதை
« on: September 26, 2012, 04:13:49 PM »
தமிழே!
உனக்கொரு வாழ்த்துப்பாட விருப்பமாய் இருக்கிறது
எந்த மொழியில் பாடுவதென்றே ஐயமெனக்கு
அழகு தெலுங்கில் அடித்தொண்டையில் பாடவோ
மெந்தொண்டையில் மலையாளத்தில் பாடவோ
இளய கன்னடத்திலோ இனிக்கும் துளுவிலோ
ஹிந்தியிலோ எதிலே பாட ?
அம்மே!
உலகம் போற்ற உனக்கொரு வாழ்த்து பாட வேண்டும்
ஆதலால் பாடி வைக்கிறேன்
ஆங்கிலத்தில்.
அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: தலைப்பற்ற கவிதை
« Reply #1 on: September 26, 2012, 10:29:10 PM »
நல்ல இருக்கே...
ஆங்கில வாழ்த்து காணோமே


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Anu

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #2 on: September 27, 2012, 07:07:04 AM »

ஆதலால் பாடி வைக்கிறேன்
ஆங்கிலத்தில்.
[/quote]
arumaiyaana kavithai.
thamizhai paada thamizhil vaarthai indri
aangilathil paaduringala aadhi


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: தலைப்பற்ற கவிதை
« Reply #3 on: September 27, 2012, 12:01:59 PM »
இந்த கவிதையின் நேரடி பொருளில் ஒரு எள்ளல் இருக்கும், தமிழின் பெருமைகளை கூட ஆங்கிலத்தில் எழுதினால்தான் தமிழன் படிப்பான் எனும் எள்ளல்

இக்கவிதையின் பின் புலத்தில் பின்னவீனம் எனும் யுக்தி ஒன்று ஒளிந்து கிடக்கிறது..

அதாவது பின்னவீனத்தின் முக்கியமான கோட்பாட்டில் ஒன்று தகர்ப்பமைப்பு = எதிர்நிலைகளை சமனாக்குதல்..

ஆங்கிலம் என்பது மையம், தமிழ் என்பது விளிம்பு..

மையம் என்பது ஆதிக்கநிலையை சார்ந்தது..

அப்படி ஆதிக்க நிலையில் உள்ள ஆங்கிலத்தில் தமிழை பாடுவதன் மூலம் தமிழின் விளிம்பு நிலை அழிந்து ஒரு சமனுண்டாகிறது..

மற்றொரு கோணத்தில்..

தமிழ் = அம்மா
தெலுங்கு,மலையாளம், கன்னடம், துளு = பிள்ளைகள்
ஹிந்தி = அப்பா
ஆங்கிலம் = மருமகள்..

மொழிகளெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு குறியீடாக ஆகிறது..

மாமியார் = மருமகள் சமனாக்கம் இதுவும் பின்னவீனத்துவ சித்தாந்தம் கொண்ட நிலையே..

அன்புடன் ஆதி

Offline Gotham

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #4 on: September 27, 2012, 12:14:04 PM »
தல சுத்துது :)

Offline Global Angel

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #5 on: September 27, 2012, 12:39:27 PM »
congrads gotham :)
                    

Offline Global Angel

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #6 on: September 27, 2012, 12:43:15 PM »
இங்கும் நா வாரத்துக்குள்ளே பொருள் விளக்கம் சொல்லியாச்சு என்ன பின்னூட்டம் போட? நல்லா இருக்கு ஆதி ... இத மட்டும்தான் சொல்ல முடியும் 
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: தலைப்பற்ற கவிதை
« Reply #7 on: September 27, 2012, 01:01:30 PM »
கோவப்படாதீங்கோ, இனி நீங்க பின்னூட்டம் போடாம‌ விளக்கம் தரல‌

அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #8 on: September 27, 2012, 01:04:58 PM »
 அயோ நா கோபபடல... நீங்க சொனதுக்கு அப்புறம் நானும் இததான் நினசென்னு சொல்றது அவ்ளோ அழகா இருக்காதுன்னு சொல்லவாறன் அவ்ளோதான்
                    

Offline Gotham

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #9 on: September 27, 2012, 01:12:32 PM »
அயோ நா கோபபடல... நீங்க சொனதுக்கு அப்புறம் நானும் இததான் நினசென்னு சொல்றது அவ்ளோ அழகா இருக்காதுன்னு சொல்லவாறன் அவ்ளோதான்
நாங்க நம்பிட்டாலும்.. :P

Offline Gotham

Re: தலைப்பற்ற கவிதை
« Reply #10 on: September 27, 2012, 01:12:46 PM »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: தலைப்பற்ற கவிதை
« Reply #11 on: September 27, 2012, 02:21:12 PM »
இந்த கவிதையை வாசித்த நண்பர் ஒருவர், மருமகள் லத்தீன் (சோனியா அம்மாவ சொல்றார்) தானே கேட்டார்

அத‌ற்கு கீழுள்ள விளக்கம் குடுத்தேன்

லத்தீன் = லத்து ஈன்

லத்து = லதா(எனும் பெயரை செல்லமா அழைத்தல்)

லதா = தாவரம்

ஈன் = இவ்வுலகம், இவ்விடம், இத்யாதி, இத்யாதி

தாவரங்கள் தான் இந்த உலகின் மூத்தக்குடிகள், ஆக, லத்தீன் = இவ்வுலகின் மூத்தக்குடிகள்

தா வரம் இவ்வுலகம் என்று பிரித்தால், இவ்வுலகில் வாழ்த்தை வேண்டி பிறந்தவர்கள் ஆவர்..

லத்தீன் = லத்து ஈன்

லத்து = லதா

லதா(LATA) = துவக்கம்

லத்து ஈன் = ஈன்ற துவக்கம்

அதலால் லத்தீன் மருமகள் அல்ல..
அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: தலைப்பற்ற கவிதை
« Reply #12 on: September 27, 2012, 07:06:22 PM »
கவிதைக்கு விளக்கம் கேட்பதே என் வாடிக்கை ஆகிவிட்டது..
புரிந்த பின் படித்தால் பொருள் அருமையாக இருகின்றது..

பொறுமையாக விளக்கும் ஆதிக்கு மிக்க நன்றிகள் :)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்