வாரத்தில் நாட்கள் எத்தனை? ஏழு
ஞாயிரு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
இசையில் ஸ்வரங்கள் எத்தனை? ஏழு
சட்ஜம், ரிசபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம்,தைவதம், நிக்ஷாதம்.
வானவில்லில் நிறங்கள் எத்தனை? ஏழு
ஊதா, இலநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு
பெண்ணின் பருவங்கள் எத்தனை? ஏழு.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
உலோகங்கள் எத்தனை? ஏழு
பொன், வெள்ளி, இரும்பு, செம்பு,ஈயம், தரா, கஞ்சம்.
மண்டலங்கள் எத்தனை? ஏழு
வாயு, வர்ணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, மேகம்
தொன்மங்களின்படி புண்ணிய நகரங்கள் எத்தனை? ஏழு
அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை
நரகங்கள் எத்தனை? ஏழு
அள்ளல், இரெளரவம், கும்பிபாகம்,கூடகாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி
உயிர்களின் பிறப்பு எத்தனை? ஏழு
தேவர், மனிதர், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்
மலைகள் எத்தனை? ஏழு
கயிலை, இமயம், மந்தரம்,வித்தம், நிடதம், ஓமகூடம், நீலகிரி
முனிவர்கள் எத்தனை பேர்? எழுவர்.
அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.
உடம்பில் உள்ள பொருட்கள் எத்தனை? ஏழு
இரதம், குருதி, எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்.
புண்ணிய நதிகள் எத்தனை? ஏழு
கங்கை, காவிரி, குமரி, யமுனை, நருமதை, சரசுவதி, கோதாவரி.
மேகங்கள் எத்தனை? ஏழு
சம்வர்த்தம், ஆவர்த்தம், துரோணம், புட்கலாவர்த்தம், காளமுகி,
சங்காரித்தம், நீலவருணம்,
கன்னிகைகள் எத்தனை பேர்? எழுவர்
அபிராமி,இந்திராணி, கெளமாரி, காளி, நாராயணி, மயேசுவரி, வராகி.
கடல் எத்தனை? ஏழு
உப்பு,நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்.
தாளங்கள் எத்தனை? ஏழு.
துருவ, அட, ஏக, திரிபுடை, ரூபக, சம்பை, மட்டிய தானங்கள்.
தீவுகள் எத்தனை? ஏழு
நாவல், இரவி, குசை, கிரவுஞ்சம், இலவம், தெங்கு, புட்கரம்,
இப்படி எதை எடுத்தாலும் ஏழாகவே இருக்கிறது. ஏன் ஆறு இல்லை? எட்டு இல்லை?
ஏழு ஒரு மர்ம எண்.படைப்பின் ரகசியம் அங்கே ஒளிந்திருக்கிறது.
கற்காலத்தில் இருந்தே ஏழின் முக்கியத்துவம் தொடங்கி விட்டது.
வெளியின் பரிமாணங்கள் ஏழு( வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மேல். கீழ், மையம் )என்பதை புதிய கற்காலத்திலிரு ந்தே மனிதன் அளவிட்டு விட்டான்.
வாரத்தில் நாட்கள் ஏழு என்பதை கிரகங்களை வைத்தே பழங்காலத்தில் வகுத்தி விட்டார்கள்.
இந்த ஏழு கிரகங்களே ப்ல்வேறு ஏழுகளுக்குக் காரணம்.
உலகில் எல்லா இனத்தவரும் ஏழின் மகத்துவத்தை அறிந்திரு ந்தனர்.
எகிப்தியர்கள் பிரமிட்டுகளை ஏழு நிலைகளாக கட்டினார்கள்.
பீகிங்கில் வான்கோயிலும் ஏழு நிலைகளாகவே கட்டப்பட்டிருக்கிறது.
எழுநிலை மாடங்கள் கட்டுவது நாகரிகங்களில் காணப்ப்படுகிறது.
தமிழ் நாட்டிலும் இவை உண்டு.
இறைவனை அடைய ஏழு நிலைகலை கடந்து செல்லவேண்டும்
என்பதையே இவை குறியீடாக நின்று உணர்துகின்றன.மேலை நாட்டு புராணங்களின் படி பாவங்களும் ஏழு. புண்ணியங்களும் ஏழு.
சதுரமும் முக்கோணமும் இணையும்போது ஏழு முனைகள் உண்டாகுகின்றன. இவை வானமும் பூமியும் இணைவதைக் குறிக்கும்.
இதனால் ஏழு என்பது முரண்பாட்ட இரண்டின் போராட்டத்தைக் குறிக்கும்.
பிறவிகள் ஏழு என்பதை சமணர்கள் அறிந்து உரைத்தனர். அவை தேவர், மனிதன், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
ஏழு பிறவி என்பதை சிலர் மனிதன் தான் செய்த வினைக்கேற்ப ஏழு தடவை பிறப்பான் என தவறாக கருதிக் கொண்டனர்.
சமணர்கள் காட்டிய ஏழு பிறவிகள் அல்லாமல் வேறு வகையிலும் ஏழு பிறவிகள் காட்டப்படுகின்றன.
அறிவியல் ஓர் ஏழு பிறவிகலைக் காட்டுகிறது. ஆன்மிகமும் ஓர் ஏழு பிறவிகளைக் காட்டுகிறது.
பரிணாமக் கொள்கையின் படி உயிர் ஏழு பிறவிகள் எடுக்கிறது.
1) நீரில் தோன்றிய முதல் நும்ணுயிர்
2) தாவரம்
3) மீன் முதலிய நீர்வாழ் உயிரினம்
4) ஊர்வன
5) பறப்பன
6) விலங்கு
7) மனிதன்
ஆன்மீகத்தின்படியும் மனிதன் ஏழாவது பிறவியாக இருக்கிறான். பரம்பொருளில் இருந்து எவ்வாறு படைப்புகள் வெளிப்பட்டன என்பதை விளக்கவந்த சூஃபித் தத்துவம்,
1) பரம்பொருளின் அகண்ட பரிபூர்ண சியஞ்சைதன்ய நிலை (அஹதிய்யத்}
2) பரம்பொருள் தன் குணங்களைத் தொகுப்பாக உணரும் நிலை ( வஹ்தத்)
3) பரம்பொருள் தன் குணன்க்களை வகுத்து வபரமாக அறியும் நிலை ( வாஹீதிய்யத்)
4) இயற்கையின் மோல சக்கிகள் ( ஆலமுல் மலக்கூத்}
5) மூல மாதிரிகள் ( ஆலமுல் மிசால்)
6) சடவுலகு ( ஆலமுல் அஜ்சாம்)
7) மனித உலகு (ஆலமுல் இன்சான்)
அறிவியல்படியும், ஆன்மீகப்படியும் மனிதன் ஏழாவது பிறவியாக இருப்பது வியர்ப்பை அளிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மனிதனுக்கு ஏழு பிறவிகள் என்பது தெரிகிறது.
இதிலிருந்து ஏழின் மர்மமும், படைப்பின் ரகசியமும் வெளிப்படுகின்றன.
ஏழு பிறவிகளின் உச்சத்தில் அல்லது முடிவில் மனிதன் இருக்கிறான். அவனேடு ஏழு முடிந்து விடுகிறது.
அதாவது ஒன்றில் தொடங்கும் எதுவும் ஏழில் நிறைவடைகிறது அல்லது முடிவடைகிறது என்பது தான் அந்த ரகசியம்.
மனிதனுக்கு இன்னொரு வகையிலும் ஏழு பிறவிகள் உண்டு. அது ஏழு தலைமுறை.
ஒரு மனிதனுடைய உருவமும் குணாதிசயங்களும் ஏழு தலைமுறை வரை ரத்தத்தின் வழியே பயணம் செய்யும்.
இந்த உருவமும் குணாதிசயங்களும் போகப்போக மங்கி ஏழாவது தலைமுறையில்மறைந்து விடும்.
இது ஒரு சுழற்சி வட்டம்.
மனிதனுக்கு இன்னொரு சுழற்சி வட்டமும் உண்டு.
ஒவ்வொரு ஏழு ஆண்டிலும் மனித ரத்தத்தில் உள்ள செல்கள் முற்றிலும் மாறிப் புதிய செல்கள் தோன்றி விடுகின்றன.
இதை நம் முன்னோர் அறிந்திருந்தது வியர்ப்பை அளிக்கிறது. இதை அறிந்திருந்ததால் தான்
ஓரெட்டில் ஆடாத ஆட்டமும்
ஈரெட்டில் கல்லாத கல்வியும்
மூவெட்டில் முடியாத மணமும்
நாலெட்டில் பெறாத பிள்ளையும்
ஐயெட்டில் தேடாத செல்வமும்
ஆறெட்டில் பார்க்காத தலங்களும்
ஏழெட்டில் பெறாத நிறைவும் வீண்
என்ற அற்புதமான பொன்மொழியை உருவாக்கினர்.
அந்த காலத்தில் பெறுங் குற்றவாளிகளை நாடு கடத்துவார்கள். தீவாந்திர சிட்சை எனப்படும் இந்தத் தண்டனையின் காலம் பதினாஙு ஆன்டுகள்.
இப்போதும் ஆயுள் தண்டனை காலம் பதினாஙு ஆண்டுகள்.
இதுவும் ஏழாண்டு சுழற்சி வட்டத்தை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டிருக்கிறது.
பதினான்கு ஆண்டுகளில் இரண்டு சுழற்சி வட்டம் நடந்து விடும்.
இதனால் குற்றவாளி திருந்திப் புது மனிதனாக மாறிவிடுவான் என்பதே இந்த தண்டனைகளின் நோக்கமாகும்.
இராமாயணத்தில் இராமன் காட்டுக்கு போக வேண்டும் என்று வரம் பெற்ற கைகேயி அவன் காட்டில் பதினான்கு ஆண்டுகள் இருந்து தவம் செய்ய வேண்டும் என்றாள்.
ஏன் இந்த நிபந்தனை விதித்தாள் என்றால் பதினான்கு ஆண்டு என்ற இரண்டு சுழற்சி வட்டத்தால் இராமனுக்கு தன் சொந்த நாட்டுப் பற்று கூட நீங்கிவிடும்.
ஒருவேளை அவன் நாட்டுப் பற்றோடு திரும்பி வந்தாலும் பதினான்கு அதை விட்டு நீங்கி இருந்ததால் அனுபோக பாத்தியதையை இழந்துவிடுவான்.
இந்த ஏழுக்குள் இன்னொரு ரகசியம் இருக்கிறது.
வானவில்லில் ஏழு நிறங்களை பார்க்கிறோம். நிறங்கள் ஏழு தானோ எனறால் இல்லை.
இந்த நிறங்களுக்கு அப்பாலும் நிறங்கள் உண்டு.
அறிவியல், புற ஊதக் கதிர்கள்( ULTRA-VIOLET RAYS) பற்றியும், அகச்சிவப்புக் கதிர்கள்( INFRA-RED RAYS) பற்றியும் கூறுகிறது.
ஊதவுக்குப் பிறகும் சிவப்புக்குப் பிறகும் நிறங்கள் வெளிறிக்கொண்டே போகின்றன. இது ஒரு வட்டத்தின் இறுதியில் நிறமற்றதில் இணைகின்றன.
ஊதா, சிவப்புக்கு அப்பால் நிறங்கள் இருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது. அவை மனித பார்வைக்கு அப்பாற்பட்டவை.
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது உண்மை, ஒன்றிலிருந்து ஏழுவரை உள்ளவையே மனித பார்வைக்குப் புலப்படும்.அப்பால் உள்ளவை புலப்படா.
எல்லாம் ஏழாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்.
தமிழில் ஏழு என்ற சொல் வியப்பானது
ஏழு என்பதற்கு 'தோன்றுதல்', 'புறப்படுதல்', 'தொடங்குதல்', 'தொழிலுறுதல்','உயிர் பெற்றெழுதல்'என்ற பொருள்கள் உண்டு.
தமிழில் உள்ள ஞானச் சொற்களில் இந்த ஏழும் ஒன்று.