Author Topic: உன் நினைவின் உளறல்கள் ......  (Read 617 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உன் நினைவின் உளறல்கள் ......
« on: September 25, 2012, 12:51:32 PM »
புனிதமானவளே !
என் கற்பனைகுதிரைகள் உன் மீது
புகார் கடிதம் வாசித்த தகவலதை
அதற்குள் யார் உன்னிடம் சேர்த்தது ?

என் ஒட்டுமொத்த இழப்பையும் ஈடு செய்யும்படி
எண்ணிக்கை தெரியவில்லை, இருந்தும் எண்ணில்லா
முத்தங்களை சத்தமில்லாமாலம் சுத்தமாய் இரைத்திருக்கின்றாய்
நள்ளிரவினில் நேற்று இன்பக்கனாவினில்
என் கரிக்கோளுக்கும்,   கற்பனை குதிரைகளுக்கும்

இதோ, மீண்டும் சீரான ஓட்டத்தில் சீறி பாய்ந்திடும்
கரிக்கோலும் , கற்பனை குதிரைகளும் .......


***************************************

என்னவளே !
என் உயிரினில் உயிராய் புதைந்தவளே !
எழுதுககோலோ . கரிக்கோலோ கொண்டு  பதிந்திடவில்லை
என் உயிர்க்கோலைகொண்டு அழுந்த பதித்திருக்கின்றேன் உனை
எல்லாவற்றையும் விட மிக பெரிய அழிப்பான் காலம்
எக்காலத்திலும் அக்காலத்தாலும் முடியாது
எழிலாளே ! உன்னை, உன் நினைவை, உனக்கான காதலை
என்னில் இருந்து அழித்திட ....

Offline supernatural

Re: உன் நினைவின் உளறல்கள் ......
« Reply #1 on: September 28, 2012, 01:54:20 PM »
என்னவளே !
என் உயிரினில் உயிராய் புதைந்தவளே !
எழுதுககோலோ . கரிக்கோலோ கொண்டு  பதிந்திடவில்லை
என் உயிர்க்கோலைகொண்டு அழுந்த பதித்திருக்கின்றேன் உனை
எல்லாவற்றையும் விட மிக பெரிய அழிப்பான் காலம்
எக்காலத்திலும் அக்காலத்தாலும் முடியாது
எழிலாளே ! உன்னை, உன் நினைவை, உனக்கான காதலை
என்னில் இருந்து அழித்திட ....


kaalangal eththanai kadanthaalum nenjil pathintha unmai kaathal athai marakkavum iyalaathu..azikkavum mudiyaathu..


ularalgaley iththanai aazamaai ..alagaai irukka..
unarnthu varum varigal innum alagaai irukkumey..
ethirpaarppukkaludan...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!