ஹா ஹா ஹா
//நேரம் ஆகியும் தன்னைத் தேடி வரவில்லையே என்று
பெண் எறும்பு
மெல்ல மேல் ஏறி சென்று பார்த்தால்
ஆண் எறும்பு பெண்ணின்
உதட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது//
ஆம்பளையா பொறந்துட்டா எறும்பா இருந்தாலும் சபலபுத்தியிருக்கும் என்று நகைச்சுவையோடு சொல்லிய விதம் மிக அருமை
//கீழே விழுந்த பெண் எறும்பு
கோபமாய் வேகமாய் நடக்க
ஆண் எறும்பு
மன்னிப்புக் கேட்டுக்கொண்டே பின்னால் சென்றது//
காதலிக்கும் போது எற்ம்பாய் இருந்தாலும் செய்த தவறுக்கு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கொண்டே ஆண் பின் தொடர வேண்டும் என்பதாய் அப்பட்டமாய் சொன்னது மிக சிறப்பு
சிரிப்பை அடக்க முடியவில்லை, அழகிய கற்பனை
உலகின் அழகின் பிரதேசம் என்று அந்த பெண்ணின் முகத்துக்கு கூட்டி சென்றதென்றால் அவள் எவ்வளவு அழகாக இருந்திருப்பால், எறும்பு கூட அழகிய பெண்களை சைட் அடிக்கும் போல
இது போன்ற மெல்லிய பிரதேசத்தில் நடந்ததில்லை என்று பெண் எறும்பு சொன்ன விதத்தில் பெண்ணுடலின் மென்மையை வசீகரத்தை சொன்னது அழகு
அழகிய பெண்க்களுக்கும் இன்னும் அழகு சேர்ப்பது கன்னங்குழி அதை சொன்ன விதமும் இன்னும் அழகு
மொத்தத்தில் நல்ல கற்பனை, கவிதை
ரொம்ப நல்லா இருக்கும் லீ, தொடர்ந்து அசத்துங்க