Author Topic: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )  (Read 3825 times)

Offline pEpSi

santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« on: August 17, 2011, 08:12:07 AM »
நட்பா? காதலா?
நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்.
« Last Edit: August 17, 2011, 08:21:01 AM by ManMathaN »

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta kavithaiGal )
« Reply #1 on: August 17, 2011, 08:19:08 AM »
ஒரு சமயம்
கடல் அலைகளைப்
பார்த்துப் பார்த்து
கற்றுக் கொண்டிருப்பாளோ?
என்னை
ஏமாற்றி விட்டுப் போக!
« Last Edit: August 17, 2011, 08:21:46 AM by ManMathaN »

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #2 on: August 17, 2011, 08:24:04 AM »
உன்னை

நினைக்காத நாளில்லை...

உன்னை நினைக்கவில்லை என்றால்

என் வாழ் நாளில் அது நாளே இல்லை...

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #3 on: August 17, 2011, 08:25:31 AM »
உன்னிடம் தோற்க
நான் தயார்தான்
ஆனால் நம்
காதலை
தோற்கடித்துவிடாதே
அந்த தோல்வியை
தாங்கி கொள்ளும்
வலிமை என்
இதயத்திற்கு இல்லை...........

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #4 on: August 20, 2011, 08:05:23 AM »
தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #5 on: August 20, 2011, 08:06:52 AM »
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை....

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #6 on: August 20, 2011, 08:21:41 AM »
செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின்
இரவின் இருளின் முற்றுப் புள்ளியோடு
முடிவடைந்ததாய் சொல்லப் பட்ட
நாளொன்றின் பின்னலும்
தினமொரு புதிய பொழுது
நீள்கிறது

தீர்ந்து போன பத்தியின்
சாம்பலின் நசிவிலும்
வீடெங்கும்
விரட்டி விட முடியாது
நிறைந்து கிடக்கும் வாசமாய்
நீயும் நானும் பேசி முடித்து விட்ட
வாக்கியங்களின் நீள்
அமைதியின்
பின்னும்
இன்னும்
சொல்லி விட முடியாத
தேவையுமில்லாத
உணர்வுகள் நீளப் போகின்றன
சுவாசமுடன்

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #7 on: August 20, 2011, 08:46:39 AM »
கரைகளே...
நெருப்பாய் இருந்தால்
நதிக்கொன்றும்
நஷ்டம் இல்லை...
நண்பர் உனக்கு
நம்பிக்கை இருந்தால்
தடைகளொன்றும்
கஷ்டம் இல்லை

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #8 on: August 20, 2011, 08:48:19 AM »
இல்லாதவனுக்கு வயிறு
நிறைந்தவனுக்கு மூளை
கனத்தவனுக்கு ஆன்மா
தேடும் இடம்
மனிதனுக்கு மனிதன் மாறுபடும்
தனிமையும் ஒரு பறவையும்
தூக்கம் தொலைந்த
ஓர் அகாலம்
அடர்ந்து படர்ந்திருந்தது
இரவின் கரிய கூந்தல்
தனிமைக் குகையின்
நினைவுப் பாதையில்
படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு
மென்மையான நிசப்தத்தைப்
பிளந்து கொண்டு
வன்மையாக ஒலிக்கிறது
ஒரு பறவையின் கதறல்
எப்போதும் கேட்டிராத
பெயர் தெரியாத ஒரு பறவையின்
குரல் அது
தன் தனிமை தவிர்க்க
விட்டு விட்டு விடாது கத்துகிறது
கரைந்து புதைந்த
அந்தப் பறவையின் குரல்
ஆழ்ந்த மௌனத்திலிருந்து
எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு
பின்னாளில்
என்
தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம்
நட்சத்திர ஒளி
இந்த ஒளி
நட்சத்திரத்திலிருந்து
எத்தனை ஆண்டுகளுக்கு முன்
கிளம்பியிருந்தால் என்ன
நான் பார்க்கும்போது
அது கண் சிமிட்டுகிறது

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #9 on: August 20, 2011, 08:49:31 AM »
நான் அப்படியே நானாகத் தெரிவேன்
நான் நானாகத் தெரிந்தாலும்
கண்ணாடி மனிதனுக்கு இல்லை
என்னைப் போல் நிறைய முகங்கள்

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #10 on: August 20, 2011, 08:50:36 AM »
அடிக்கடி
ஒயில் பெண்கள்

நிறைய தரம்
புதையல்

அபூர்வமாய்
மழை

ஒவ்வொரு நேரம்
பௌர்ணமி நிலா

சிலசமயம்
மலையருவி

எப்போதாவது
இராட்ஷஸன்

நேற்று
நீலவானம்

முந்தா நாள்
நீ

ஒரே
ஒரு தடவை கடவுள்

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #11 on: August 20, 2011, 08:52:18 AM »
யாரென்றே தெரியாத பெண்ணிற்க்காக.....!
நான் நின்று காத்திருக்கிறேன்...!!
என் காதலுடன்

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #12 on: August 29, 2011, 08:52:13 PM »
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

தென்றல் தீர்ந்துவிடும்
திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்

கடல் கொண்டுவிடும்
இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்

ஓசோன் பல ஓட்டை விழும்
உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

காடு குறைந்துவிடும்
காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்

மாசு சூழ்ந்துவிடும்
மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்

சூரியன் சுட்டுவிடும் மனித
சுதந்திரம் கெட்டுவிடும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

விஞ்ஞானம் தொட்டுவிடும்
வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா அழுகிறாய்

பல நோய் தாக்கும்
பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்

சாக்கடை நீராகும் அதற்கு
சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

நீரில்லை வருங்காலத்திலே வாழ
நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்

நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்
நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ

என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது
உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்

பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது
பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்

உதிர்ந்த முத்துகளை நீ விதை எடுத்து
உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து

வருகின்ற காலத்திலே வளம் காடாக்கு
வயதுக்கு நீ படிக்கையிலே இது போலாக்கு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே
மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு

புதையல் நீராக்கு பூமி சேறாக்கு

விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு
வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு

உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கத்திலே
ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு

ஆராரோ கண்ணே ஆராரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே
வறுமை நீ ஒழிப்பதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு

காலத்திலே உன் காதல் வேகத்திலே
சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு

ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே

அதிகாலை தூக்கத்திலே
செல்போன் அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு

ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே
ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப இப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப.........

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #13 on: August 29, 2011, 08:53:11 PM »
காட்டை அளித்து வீட்டை கட்டியவன்
காரும் சோறும் கடையில் தின்றவன்
மூட்டை கட்டி முதலீடு செய்தவன்
நாட்டை காக்க மறந்துவிட்டான்......
சொகுசும் பவுசும் போதுமென்று
சொக்காய் போட்டு திரிந்தவன்
பரம்பரை வழக்கத்தை மாற்றவே
பவுடர் பூசி வாழ்கிறான்....
கோடி கோடி சேர்க்கவே
குற்றம் நிறைய செய்கிறான்
கணினி யுகம் மாறியும்
கடமை மறந்து வாழ்கிறான்
சுமைகள் கோடி இருந்துமே
சுகமாய் வாழ தெரியாமல்
பகைமை கொண்ட நோக்கிலே
பார் உலகை மறந்துமே
வேறுலகில் சென்றுமே
வேண்டிய வசதி பெற்றுமே
நாசம் கொண்ட ஆசையால்
நாடும் வீடும் மறந்துமே
நன்மையெல்லா தொலைத்துமே
பாதி உயிர் போகவே மீதி உயிர்
மண்ணிலே சேரும்போது சொர்க்கமே...
இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா!

Offline pEpSi

Re: santhosh (ManMathaN)kavithaigal ( Rasithu Sutta KavithaiGal )
« Reply #14 on: September 27, 2011, 08:18:28 AM »
காதலில் தொட்றேன் என்று மனம் தளராதே
உன் தோல்வி வெற்றியாய் மாறும்
உனக்கென்ன ஒரு பொண்டாட்டி
 உன்னை அரவனைகும்போது...