Author Topic: வாசத்தின் வாசல்...  (Read 2097 times)

Offline JS

வாசத்தின் வாசல்...
« on: August 16, 2011, 09:11:41 PM »
இவள் சொல்லும் சொற்களுக்கு
அர்த்தம் உள்ளது...
என் ஸ்வரத்தில் கூட
இராகம் உள்ளது...

எங்கோ கேட்கிறது
உன் பாடல்...
அதை கேட்க துடிக்கிறது
என் நாணம்...

செல்லமாய் நீ கொஞ்சும் ஓசை
செவிகளில் பாய்கிறது...
சிக்கலாய் நினைத்தேன் உன்னை
சீக்கிரமாய் அடைந்தாய் என்னை...

என் சுவாசமாக இருக்கக் கூடாதா
வாசம் வீசும் மலராய் தானே இருக்கிறாய்
என்றும் என் வாசத்தின் வாசல்
நீதானே என் கண்மணி...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: வாசத்தின் வாசல்...
« Reply #1 on: August 16, 2011, 09:14:02 PM »
Quote
செல்லமாய் நீ கொஞ்சும் ஓசை
செவிகளில் பாய்கிறது...
சிக்கலாய் நினைத்தேன் உன்னை
சீக்கிரமாய் அடைந்தாய் என்னை...

 :-* :-*