Author Topic: ~ சேமிப்பு பற்றி .. கண்டிப்பா படிங்க பயன் உள்ளதாக இருக்கும் !!!!! ~  (Read 748 times)

Offline MysteRy

சேமிப்பு பற்றி .. கண்டிப்பா படிங்க பயன் உள்ளதாக இருக்கும் !!!!!




சேமிப்பு என்பது ஏதோ நிரந்தர வருமானம் உள்ளவர்களுக்கும் அதிக வருவாய் உள்ளவர்களுக்கும்த் தான் சாத்தியம் என்றில்லை குடும்பங்களில் மாதந்தோறும் செலவிடும் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கென்று ஒதுக்குவதேயாகும். அதற்கு குடும்பத்தின் பண வருவாய்க்கேற்றபடி சிக்கனமாய் செலவு செய்து சேமிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதை பெண்களுக்கு சொல்லத் தேவையில்லை ஆனாலும் ஒரு கை தட்டினால் ஓசை வராதே குடும்பத்தினர் அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் தான் இந்த சேமிக்கும் பழகக்கத்தை தொடர்ந்து செயல் படுத்த முடியும்.

அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தின் வருமானத்திலிருந்து தொடங்கி குடும்ப நபர்களின் எண்ணிக்கை, குடும்பத்தின் இருப்பிடம், குடும்ப நபர்களின் ஆரோக்கியம், குடும்பத்தினரின் பழக்க வழக்கம், வாழ்க்கை தரம்,குடும்ப நபர்களின் பங்கீடு, அவர்களின் ஒத்துழைப்பு, பொருட்களின் விலை வாசி, போன்ற பல விசயங்கள் அதை நிர்ணயிக்கின்றன. இருந்தாலும் இவைகள் அனைத்திலும் அதீத அக்கறை செலுத்தி தேவையற்ற செலவுகளை கண்டறிந்து குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிப்பத்தின் மூலம் நிச்சயம் ஒரு கணிசமான தொகையை மாதந்தோறும் சேமிக்க முடியும் என்ற கட்டாயத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் சேமிப்பினால் பொருளாதார பாதுகாப்பு கிடைப்பதுடன் வாழ்க்கை தரம் உயர்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த சேமிக்கும் பழக்கத்தால் பல நன்மைகள் உண்டு அதில் முக்கியமாக வீட்டில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்கலாம், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்கலாம்,வேலை இழப்பினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கலாம், மேலும் விருப்பப்பட்ட தொழில் தொடங்கலாம் , குழந்தைகளின் திருமணம் மற்றும் உயர் கல்வி மற்றும் வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவது போன்ற எண்ணற்ற தேவைகளுக்கும் சேமிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே அவை சாத்தியப்படும் மேலும், இவ்வாறு திட்டமிட்டு செய்த சேமிப்பை மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் அதிலிருந்து மாதந்தோறும் ஒரு பண வருவாயையும் பெற முடியும் போன்ற அனைத்தையும் தெளிவாக குடும்பத்தினருக்கு எடுத்து கூறுவது குடும்பத்தலைவியின் கடமை என்றுக்கூட சொல்லலாம்.

பொதுவாக சேமிப்பில் பலவகை உண்டு அதில்; தனிப்பட்ட சேமிப்பு, கட்டாய சேமிப்பு, கூட்டு சேமிப்பு. என்று மூன்று வாரியாக பிரிக்கலாம். தனிப்பட்ட சேமிப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்து அதாவது பாரம்பரிய சேமிப்பு முறையான தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களிலும் வீடு, மனை போன்ற அசையா சொத்திலும் முதலீடு செய்து சேமிப்பை வைத்துக் கொள்வது.ஆனால் இதில் உடனடியான பண வருவாயைப் பெற முடியாது என்றாலும் நீண்ட காலத்திற்கு பின்பே நல்ல லாபத்தை காண முடியும்

அடுத்தது கட்டாயச் சேமிப்பு இவை அரசு ஊழியர்களுக்காகவும் தனியார் நிறுவனங்களுக்காகவும் ஏற்படுத்தப் பட்ட திட்டம் அதில் பொது சேமிப்பு வைப்பு நிதி என்றும் பங்களிப்பு சேமிப்பு நிதி என்று இரண்டு வகை உள்ளது. பொது சேமிப்பு நிதி அரசாங்க ஊழியரின் மாத வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாதா மாதம் பிடிக்கப்பட்டு ஊழியர்கள் ஒய்வு பெரும் போது அவை திருப்பி செலுத்தப்படுகிறது. இரண்டாவது பங்களிப்பு சேமிப்பு நிதி. இது தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.இதிலும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடிக்கப்பட்டு அதே அளவில் அந்நிறுவனமும் செலுத்தி அவ்வாறு சேர்க்கப்பட்ட தொகை அவ்வஊழியர் ஒய்வு பெரும் போது மொத்தமாக திருப்பி செலுத்தப்படுவது இதில் கடன் வாங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதைப் போல் கூட்டுச் சேமிப்பு என்பது வங்கிகலும் பல நிதி நிறுவனங்களும் மக்களின் நலனுக்காக பல சேமிப்பு திட்டங்களை ஏற்ப்படுத்தி வைத்திருக்கின்றன. அதில் சுலபமாக வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்கி குறைந்த தொகையிலிருந்து சேமிக்க தொடங்கலாம். இதை தவிர ஃ பிக்சட் டெபாசிட் என்ற கணக்கில் எத்தனை காலம் வேண்டுமானாலும் பணத்தை போட்டு வைக்கலாம்.காலம் அதிகமானால் வட்டியும் அதிகமாக கிடைக்கும் இதனால் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட வருமானமும் கிடைக்கும். இதைப் போலவே தவனைக் கால சேமிப்பு முறையும் உள்ளது அதிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை போட்டு வைத்திருந்து அதற்கும் மாதன்தூரும் வட்டியை வருமானமாக பெறலாம். இதைத்தவிர தொடர் சேமிப்பு, குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் போன்ற வருங்கால வைப்பு நிதி மற்றும் ஒய்வு கால வைப்பு நிதி போன்ற பல சேமிப்பு திட்டங்களுடன் குறைந்த வட்டியில் கடனுதவிகளையும் வங்கிகள் செய்து வருகின்றன.

இவையல்லாது அஞ்சல் அலுவலகங்களும் மக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பல சேமிப்பு திட்டத்தை வைத்திருக்கின்றன, இதில் மிக குறைந்த அளவு பணத்தைக் கொண்டும் சேமிப்பை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்.மேலும் சேமிப்பு பத்திரங்களையும் அஞ்ச்சலகங்களிளிருந்து வாங்கலாம். அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் பத்து சதவீத கூட்டு வட்டியுடன் அசலும் சேர்த்து திருப்பியளிக்கப்படும். இவை அசலைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்காக திரும்ப கிடைக்கும் ஆண்டு தோறும் அளிக்கப்படும் வட்டி மறு முதலீடு செய்யப்படுவதால் இதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி விலக்கும் உண்டு.

இதைத் தவிர ஆயுல் காப்பீட்டு நிறுவனங்களும் குடும்பங்களில் தனி நபரின் இழப்பால் ஏற்படும் பொருளாதார சீர் கேட்டை தவிர்க்க பல திட்டங்களை ஏற்படுத்தி உதவி பிரிகின்றன, மேலும் தனி நபரை நம்பி வாழும் குடும்பங்களுக்கு இதன் திட்டங்கள் அதிக பாதுகாப்பையும் தருகிறது. இத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலவரையறுக்குள் கட்டி முடிந்துவிட்டால் அந்த தொகை வட்டியுடன் திரும்ப கிடைத்துவிடும்.அல்லது அது யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை அந்த நபர் குறிப்பிட்ட நபருக்கு மொத்த தொகையும் அளிக்கப்படும்.

அதற்கடுத்த முதலீட்டு பங்குகள் வாங்குவது இதில் குறைந்த காலத்தில் அதிக லாபம் கிடைத்தாலும் சில நேரத்தில் போட்ட முழு பணமும் கைவிட்டுப் போகும் ஆபத்தும் உள்ளது.ஆகவே இது அவரவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

இவ்வாறு நிறைந்து கிடக்கும் சேமிப்பு திட்டங்கள் மற்றும் பண முதலீடு செய்வதிலும் பிறரை பார்த்து ஏதோ சொந்தக்காரர் செய்கிறார் நண்பர் செய்கிறார் என்பதற்காக அவர்கள் செய்வதை எல்லாம் நாமும் அதையே பின்பற்றாமல் அவரவருக்கு பொருத்தமான அவரவரின் செளகரியத்திற்கேற்ப திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆக இனியும் காலந்தாழ்த்தாமல் ஒரு சிறு தொகையிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்குங்க. அதோடு உங்க குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்பிப்பது வீட்டிற்கு மட்டுமல்ல வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார மூலதானத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.