Author Topic: என் உயிருக்குள் கவிதை வைத்தான் ...  (Read 897 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தொன்றுதொட்டே அருந்தமிழ் மீதுனக்கு
ஈர்பொன்று   இருந்திருக்கவேண்டும் - ஆதலாலே
இன்றுதொட்டுனக்கு கவிதையின் மீது காதல்.
 
நற்கவிதைகளின் தீரா காதலி தானே நீ ??
என் வரிகளை எப்படி கவிதை என்கின்றாய் ??

உன் கவிக்கண்  கொண்டு காண்பதனால்தானோ??

சரிசரி , இந்த அற்பனுக்கு ஒரு அற்ப சந்தோஷம் ...

வறுமையில் வாடிடும் கரை (மனம்) ஈதெனும்
சிறுமையினை அறிந்தோ , அறியாமலோ , அனுதினம்
நிதம்நிதம் நினைவலைகளை நிரம்ப அனுப்புகிறாய்
கருணைக்கடலே !

நின் நிகரில்லா  கருணைக்கு,  நான்  நிகர்செய்ய
நினைந்தாலும் , ஏதும் ஆர்வத்தில்  முனைந்தாலுமது
நீல்கடலினில் வீசப்பட்ட ஒற்றை குருனைக்கு நிகராகும் .

எனைகேட்டால், உன்மேல் உயிர் (காதல் ) வைத்தான்   
உந்தன் ஊன்மேல் உயிர் (காமம்) வைத்தான்
என்பதை விட, நீ ரசிக்க, நீ ருசிக்க, நினைவுகொள்ளும்
நேரங்களில்  நினைந்து, நினைந்து கசிந்துருக
உன் உயிரில் ஒன்றிரண்டு கவிதை வைத்தான்
எனும் பெயர் போதுமே !

கவிதை உள்ள காலம் வரை என் நினைவுகளும் வாழும் !
« Last Edit: September 22, 2012, 07:32:31 PM by aasaiajiith »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
/தொன்றுதொட்டே அருந்தமிழ் மீதுனக்கு
ஈர்பொன்று   இருந்திருக்கவேண்டும் - ஆதலாலே
இன்றுதொட்டுனக்கு கவிதையின் மீது காதல்.//

தொன்றுதொட்டு என்பது காலம் காலமாய் என்று பயன்படுத்துவது

அப்படி அவள் தமிழின் மீது ஈர்ப்பு கொண்டவள் என்று சொல்வது ஏற்க இயலவில்லை, அப்படி சொல்ல நீங்களும் தொன்று தொட்டு வாழ்ந்திருக்க வேண்டும்

அப்படித்தான் பொருள் படுமாயின் இது தற்புகழ்ச்சி கவிதையாகிவிடுகிறது



தமிழ் மீது காதல் உள்ள யாருக்கும் கவிதை மீது காதலிருக்க அவசியமில்லை

இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழி காதலருக்கும் பொருந்தும்

அமைப்பியத்தின் பிதாமகனான சசுருக்கும், தகர்ப்பமைவு/கட்டுடுப்பின் பிதாமகனான தெரிதாவுக்கும் கூட கவிதைகள் மீது இருப்பு இருந்தது இல்லை

கவிதை மனசிதைக்குள்ளாக்கும் மொழி என்று இருவரும் சொன்னார்கள்

இந்த இருவரின் எழுது கோல் தூவிய விந்தில் இருந்துதான் நவீனத்துவமும், பின்னவீனத்துவமும் பிறந்தது

அப்படியிருக்க தமிழீர்ப்பு கவிதையீர்ப்பு சுத்தமாக பொருந்தவில்லை

//நற்கவிதைகளின் தீரா காதலி தானே நீ ??
என் வரிகளை எப்படி கவிதை என்கின்றாய் ??

உன் கவிக்கண்  கொண்டு காண்பதனால்தானோ??
//

என் வரிகளை எப்படி கவிதை என்கிறாய் எனும் கேள்வி தன்னடக்கம் போல துவங்கி, கவி கண் கொண்டு பார்ப்பதாலோ எனும் இடத்தில் தற்புகழ்ச்சியாகிறது மீண்டும்

கவிகண் கொண்டு பார்த்தால்தான் அது புரியும், அறிவிலிகளுக்கு புரியாது என்பது போல சொல்லப்படுகிறது,ஒருவேளை கவிதையில்லை என்று சொல்லும் பட்சத்தில் அவளும் அறிவிலி பட்டியலில் இணைக்கப்பட்டுவிடுவதாய் மிரட்டப்படுகிறாள்

//வறுமையில் வாடிடும் கரை (மனம்) ஈதெனும்
சிறுமையினை அறிந்தோ , அறியாமலோ , அனுதினம்
நிதம்நிதம் நினைவலைகளை நிரம்ப அனுப்புகிறாய்
கருணைக்கடலே !//


நினைவலைகள் மூளைக்குள் இருந்து மூளையிலேயே பாய்பவை, நினைவுகள் யாராலும் கொடுக்கப்படுபவையல்ல, அவை நாம் நமக்கு பிறரை ஞாபக்த்தில் வைத்துக் கொள்ள பதித்துக் கொள்பவை

நியூடனின் முன்றாம் விதி பற்றிய தத்துவம் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது என்பதற்காக அது நியூட்டன் அனுப்பியதாக எப்படி கொள்ள முடியும்

நம் மூளை மீண்டும் மீண்டும் அசை போடுகிறது என்று பொருள் அப்படித்தான் நினைவலைகளும்.

//நின் நிகரில்லா  கருணைக்கு,  நான்  நிகர்செய்ய
நினைந்தாலும் , ஏதும் ஆர்வத்தில்  முனைந்தாலுமது
நீல்கடலினில் வீசப்பட்ட ஒற்றை குருனைக்கு நிகராகும் .
//

நிகரில்லா கருனை என்று சொல்லிவிட்டு, நான் நிகர் செய்ய எனும் இடத்திலேயே மீண்டும் நான் உனக்கு சற்றும் சலைக்காதவன் எனும் எண்ணமே மாருவேடம் போட்டிருக்கிறது

அதுதான் நிகர் இல்லா கருணை ஆயிற்றே அப்புறம் எப்படி நிகர் செய்யும் எண்ணம் எப்படி வரும்

//எனைகேட்டால், உன்மேல் உயிர் (காதல் ) வைத்தான்   
உந்தன் ஊன்மேல் உயிர் (காமம்) வைத்தான்
என்பதை விட, நீ ரசிக்க, நீ ருசிக்க, நினைவுகொள்ளும்
நேரங்களில்  நினைந்து, நினைந்து கசிந்துருக
உன் உயிரில் ஒன்றிரண்டு கவிதை வைத்தான்
எனும் பெயர் போதுமே !
//


நீங்கள் தான் சொன்னீர்கள் நான் எழுதியது கவிதையில்லை

நீ கவிதை என்று சொல்வதில் இந்த அற்பனுக்கு அற்ப மகிழ்ச்சியே

அப்படியிருக்க நீ சசிந்துருக நான் ஒரு கவிதை எழுத முயல்கிறேன் என்று சொல்லியிருந்தால் பொருந்தியிருக்கும்

// கவிதை உள்ள காலம் வரை என் நினைவுகளும் வாழும் !//

இந்த கவிதை தற்புகழ்ச்சி கவிதைதான் ஆணித்தரமாய் நிரூபிக்கிறது இந்த வரிகள்


காதல் கவிதைகள் காதலியைவிட தன்னை புகழ்தல் காதலிக்கு உன்னைவிட நான் மேலானவன் என்பதை மீண்டும் மீண்டும் மறைமுகமாய் அவளுக்கே தெரியாமல் அவள் மனதில் பதியவைக்க முயலுதலையே சுட்டுகிறது

இவை உங்கள் கவிதைக்கு என் மனதில் தோன்றிய பின்னோட்டங்கள். மேலும் உங்கள் கவிதை திற‌மையை  செம்மை படுதும் பொருட்டே இதை தெரிவிக்கிறேன்.
அன்புடன் ஆதி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தற்புகழ்ச்சிக்கவிதை  என  சொல்லி  கவிதையில்  எல்லாம் 
அறிந்தவராக  காட்டிகொள்ள  ( இதுவும்  தற்புகழ்ச்சியே ஒரு விதத்தில்)
நினைத்திருக்கும்  அன்பரே ..உங்களின்  உள்  நோக்கத்தை 
இப்பொதுமன்றத்தை   உற்று  நோக்கும்  அனைவரும்  அறிவர் .

 எனவே,
 உங்கள் மகத்தான  சேவையால் , உங்கள் நண்பர்களும்
 முதலில்  பயன் பெற  வேண்டுமென வாழ்த்துகிறேன் !!!
« Last Edit: September 25, 2012, 11:46:47 AM by aasaiajiith »

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
உண்மைதான் இப்பொது மன்றம் என் உள் நோக்கத்தை மிக தெளிவாக அறியும்

ஒரு பதிவில் இருக்கும் அப்பத்தத்தை சுட்டுவது தற்புகழ்ச்சி என்றால் ஆம்! நான் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறேன்

தொன்று தொட்டை போலவே சேவையையும் தப்பாய் புரிந்து வைத்திருக்குறீர்கள், நண்பர்களுக்கு செய்வது சேவை அல்ல‌

உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழரே
« Last Edit: September 25, 2012, 12:01:10 PM by ஆதி »
அன்புடன் ஆதி