போய் வரவா
என் வானமே
போய் வரவா
என் சூரியனே
போய் வரவா
என் விண்மீனே
போய் வரவா
கடல் அலையே
இயற்கையோடு
சொல்லி விட்டு
போகிறேன்
உன்னிடம் சொல்லாமல்
போவதாக நினைத்தாயோ
என் இயற்கையோடு
கலந்தவன் நீ அல்லவா
மீண்டும் வந்தால்
சொல்வேன்
நான் வந்துவிட்டேன்
என்று..
திரும்பி வருவேன் என்ற
நன்பிக்கை இல்லாமல் போகிறேன்
உன் நினைவுகளை மட்டும்
சுமந்து கொண்டு போகிறேன்
அதை மட்டுமாவது எடுத்து செல்ல
அனுமதி தருவாயா?