Author Topic: சில கேள்வியும்.. இறைவனின் பதிலும்..  (Read 580 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஆண்டாண்டு காலமாய்
ஆண்டுவரும் ஆண்டவா
ஆண்டவன் என்பது எக்காலம் ?

ஆண்டாண்டாய் ஆண்டதெலாம்
ஆண்டாண்டில் முடிந்துவிட
ஆண்டாண்டாய் தொடர்ந்துவரும்
ஆண்டவன் என்பது முக்காலம்..

அறியா மைகவிழ்ந்து
அறியாத அறிவெல்லாம்
அறியாமை ஆனதுவா பெரும்பொருளே ?

அறியாத அறிவையெல்லாம்
அறியாமல் அறிந்துணர்ந்து
அறியாது வாழ்ந்துவரும்
அறியாத அந்தறிவே
அறியாமை மானிடமே!

விண்மீன்கள் தாண்டி எங்கள்
விஞ்ஞானம் தேடி செல்லும்
வினாவுக்கு விடையென்ன முதற்துகளே ?

விண்ணெல்லாம் கடந்தாலும்
விண்மீன்கள் துளைத்தாலும்
விஞ்ஞானம் தேடிச் செல்லும்
வினாவுக்கு விடையெல்லாம் உன்னினிலே!

எட்டிள சுரமதிலே
எந்த சுரம் உன் சுரம்
எப்பாடல் உன் பாடல்
எக்கருவி உன் கருவி சொல்தேவா ?

ஒன்வாய் குழல்நீ
ஐம்பொறி என் சுரம்
அடங்கி இசைத்தால் என் பாடல்
அறியாமல் தொடர்கிறது உன் தேடல்…

எவையெவை ஒழுக்கம்
எவையெவை இழுக்கு
சொல் என் இறைவா ?

உனக்கு நீயே
அஞ்சாத நிலையில்
எவைக்கு அஞ்சி
என்ன பயன் ?
அன்புடன் ஆதி

Offline Global Angel

அருமை ஆதி ... முதலில் நமக்கு நாமே அஞ்ச வேண்டும் நாம் செய்வது சரியா .. சரியான பாதையில் போகின்றோமா .. இப்படி எல்லாம் சிந்தித்து செயல் பட வேண்டும் ... தன செயலில் அச்சம் கொள்ளாதவன் பிறர் செயலின் அச்சம் கொள்ளான் என்பதை சரியாக சொல்லி இருகின்றீர்கள் ... இறைவன்  நதி மூலம் ரிஷி மூலம் தெரியாது ... அண்டங்களை தாண்டி நம் அறிவு சென்றாலும் .. அதனை தாண்டியும் ஆதி ( இறைவன் ) உள்ளான் என்பது மனது ஏற்று கொண்ட விடயம் .. அருமையான கவிதை
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
இந்த கவிதையில் வார்த்தை விளையாட்டுக்கள் முயன்றேன் என்பதைவிட, இறைவனை பார்த்து ஒரு நையாண்டி இருக்கும்

ஆண்டவன் என்பது இறந்த காலம், அப்போ இப்ப ஆள்றது யாரு என்பது போல‌

கடைசி முடிவு, கல்லூரி காலத்தில் என் நோட்டு புத்தகங்களில் இப்படி எழுதியிருப்பேன்

உனக்கு
நீயே பயப்படாத நிலையில்
யாருக்கு பயந்து
என்ன பயன் ?

நன்றிங்க‌
« Last Edit: September 18, 2012, 06:57:56 PM by ஆதி »
அன்புடன் ஆதி