Author Topic: வா கவியே வா !  (Read 517 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வா கவியே வா !
« on: September 17, 2012, 10:08:30 AM »
நானாக நானே
வரி வரைந்ததில்லை
ஓர் நாளும்
தேனே !
தேனான உன் நினைவுகளின்
பக்கத்துணையின்றி

தேனாகத்தானே நீயும்
வரி வரைந்து வந்தாய்
இந்நாள்வரை
மானே !
வலைப்பூக்கள் வருந்துவதரிவாயா ?
உன் பதிப்பு(பூ)க்கள்
பக்கத்துணையின்றி

வீணான வரி வரையும்
வீதிவீணரை எண்ணியே
வரி பதிக்க வெறுத்தாயோ ?

சீனான வரி வரையும்  சிலரின்
விதி வளர எண்ணியே
வரி பதிக்க மறுத்தாயோ?

ஆனான காரணம் அது
எதுவானாலும் சரி
தேனான உன் வரிகளைகளை
எதிர்நோக்கி கவியே !

வலைப்பூக்கள் மட்டுமன்றி
கவிப்பூக்களாய் இனிப்பு(பூ)க்கள் சொரியும்
கவிச்சோலை கவிஞர் மத்தியில்
துவர்ப்பு(பூ)க்கள் சொரியும் நானும்
எங்கள் சொந்தமாய் , சந்தமாய்
புது வசந்தமாய் உன் வரிகளுக்காக
காத்துகிடக்கின்றோம் !

வா கவியே வா !