Author Topic: உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்??  (Read 11674 times)

Offline Gotham

பாகம் 1 :

வணக்கம். நான் தான் மார்க். என்னடா இவன் தமிழ்ல பேசறானேனு பாக்கறீங்களா? எனக்கு தமிழ் தவிர இன்னும் பதினஞ்சு மொழி தெரியும். அது தவிர உங்களால உணர முடியாத இன்னொரு மொழியும் தெரியும். ஆனா உங்கள்ல பல பேருக்கு தமிழ் மட்டுமே தெரியும்ங்கறதால தமிழ்லேயே பேசறேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி என் பேர் மார்க், வயசு அஞ்சு, பிறந்த ஊர் ஜெர்மனியிலுள்ள டஸல்டார்ஃப். சொந்த ஊரும் ஜெர்மனி தான். ஆமா. நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். சுருக்கமா சொன்னா பிறப்பால நான் ஒரு நாய். பாருங்க.. இப்ப கூட ‘நாய்’ங்கற வார்த்தைய பயன்படுத்தினதுக்கு அந்த மாமா கோவமா பார்த்தார். என்னவோ அவர திட்டுற மாதிரி. மனுஷங்க திட்ட எங்க பேர பயன்படுத்தறதால ‘நாய்’ன்னு எங்கள நாங்களே கூப்டுக்க முடியல. இனிமே எங்களுக்குள்ள திட்டிக்கணும்னா ‘போடா மனுசப்பயலே’னு தான் திட்டிக்கணும் போல.

சொல்ல வந்ததைத் தவிர என்னன்னவோ பேசிக்கிட்டு இருக்கேன் பாருங்க. உங்ககிட்ட நிறைய சொல்லணும்.. பேசணும்னு தான் வந்தேன். இந்த மாதிரி கதை சொல்றது எனக்கு புதுசு. அதனால கூட தலைப்பை எப்படி வைக்கணும்னு தெரியல.

தலைப்புன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? தெரியல. ஆனா அதுக்கு முன்னாடி என்னோட கதையை கொஞ்சம் சொல்றேன். ஏற்கனவே சொன்னமாதிரி என் பிறந்த ஊரு ஜெர்மனியில இருக்கு. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நீங்க பேசற மொழிகளை எங்களால சீக்கிரமே கத்துக்க முடியும். உங்ககூடவும் பேசுவோம். நீங்க செஞ்ச பாவமோ என்னவோ நாங்க பேசுறத உங்களால் கேட்க முடியாது. ஏதோ நாங்க பேசறதை ‘குரைக்குது’னு சொல்றீங்க. அது சரி. உங்களுக்கு ஒன்னு புரியலேன்னா உங்க மேல தப்பில்ல புரிஞ்சிக்க முடியாதபடி இருக்கறது அந்த விஷயத்தோட தப்புன்னு வாதாடற ஆளு தானே நீங்க.

இப்படி தான் நான் பல மொழிகள்ல பேசுவேன். நான் வளர்ந்தது ஒரு எஞ்சினீயரோட வீட்ல. அவர் வீட்ல என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. எஞ்சினீயருக்கு ஒரு முப்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும். எஞ்சினீயரம்மா ரொம்ப நல்லவங்க. ரெண்டு பேருமே ஜெர்மன் காரங்க. அவங்க கூட பழகி தான் எனக்கு ஜெர்மன் மொழி தெரியும். அப்போ எனக்கு விளையாட்டுத் துணை பக்கத்து வீட்டில இருந்த டாமி. அவனை சின்ன வயசில தமிழ் நாட்டுல இருந்து தூக்கிட்டு வந்திருந்தாங்க. அவன் மூலமா தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். டாமி தமிழ்ல நிறைய கவிதையெல்லாம் எழுதுவான். அவன் தமிழ்ல பாடுறத கேட்க அவ்ளோ நல்லா இருக்கும். தினமும் சாயங்காலம் எஞ்சினீயர் என்னை வாக்கிங் கூட்டிட்டு போவார். வீட்டுக்குப் பக்கத்திலேயே பெரிய பார்க் இருக்கு. அங்க போய் எங்க இனத்துல இருக்கற பல சாதி நாய்ங்களோடயும் விளையாடுவேன். ஒரு நிமிஷம்.. ஏன் இப்படி மொறச்சு பாக்கறீங்க..? சரி உங்க விருப்பத்திற்கு இனி நாய்ன்ங்கற வார்த்தைய பயன்படுத்தல. ‘டாக்’ன்னே பயன்படுத்தறேன். யப்பா என்னா கோவம் வருது? இந்த உரிமை கூட எங்களுக்கு இல்லாம போச்சே.

திரும்ப.. ட்ராக் மாறிட்டேன்.. சாரி. அதான் அங்க பல டாக் வரும். எங்களுக்குள்ள இந்த சாதிப்பிரச்சனையெல்லாம் கிடையாது. எல்லோரும் ரொம்ப சந்தோஷமா விளையாடுவோம். அப்போ தான் மத்த மொழிகளையும் கத்துக்கிட்டேன். நான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையை சேர்ந்தவன். ஆணழகன். கம்பீரமா இருப்பேன். அதனாலேயே பல பெண் டாக்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என்னவோ தெரியல. அவங்க மேலல்லாம் பெரிசா ஏதும் ஈர்ப்பு வரல. சந்தோஷமா வாழ்க்கை போய்ட்டு இருந்தப்போ தான் இடி மாதிரி அந்த சேதி வந்துச்சு. அந்த எஞ்சினீயருக்கு பக்கத்து நாட்டுல வேலை கிடைச்சிருக்குங்கற சேதி. எனக்கு ஒரே கலக்கமா போயிடுச்சி. அவங்க என் மேல ரொம்ப ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னை விட்டுப் பிரிய முடியாம என்னையும் அவங்களோட கூட்டிட்டு போறதா முடிவு பண்ணினாங்க. எனக்கு ஓரளவு சந்தோஷமா இருந்தாலும் நண்பர்களை விட்டுட்டு பிரியறதுக்கு ரொம்ப கலக்கமா இருந்துச்சு. என்ன இருந்தாலும் மூழ்காத ஷிப்பு ஃப்ரண்ட்ஷிப் தானே. கிளம்ப இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த ஒரு வாரமும் எனக்கு செண்ட் ஆஃப் கொடுத்தாங்க எங்க நண்பர்கள். எப்படின்னு கேக்கறீங்களா?

முன்னமே சொன்ன மாதிரி எனக்கு ஸ்பெஷலா ஒரு மொழி தெரியும்னு சொன்னேன்ல. அதான் டாக் லாங்குவேஜ். எங்க சொந்த மொழி. நாடு கண்டங்களைத் தாண்டி எங்க இனத்தை இணைக்கற மொழி இது. யாரும் தனியா கத்துக்கறதில்ல.. இது எங்க தாய்மொழி மாதிரி. தானாவே பழகிப்போம். எந்த நாட்டில இருந்து வர்ற எந்த டாக் கூடவும் பேசவும் இந்த மொழி தான். அதனால யாரையும் நாங்க அன்னியனாவே பாக்கறதில்ல. ஆமா. உங்களுக்கு அப்படி ஒரு மொழி இல்லீல்ல.. பாவம் சார் நீங்க.

எங்க மொழியில இரவானா ஒலிபரப்பு எல்லாம் நடக்கும், ஆனா உங்களுக்கு எதுவுமே கேட்காது. என்னமோ சொல்லுவாங்களே கேட்கும் அலைவரிசைன்னு, உங்களவிட அதிக கிலோஹெர்ட்ஸ்ல நாங்க நடத்தற அந்த சானல் பத்தி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுல தான் எனக்காக ப்ரண்ட்ஷிப் பத்தின பாட்டெல்லாம் டெடிகேட் பண்ணினாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. போற ஊரில இந்த மாதிரி நட்பெல்லாம் கிடைப்பாங்களான்னு சொல்ல முடியாதே..!!

கிளம்புவதற்கு முன்னாடி அந்த எஞ்சினீயர் என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனார். அரிசி மாதிரி இருந்த ஏதோ ஒன்ன என் தோள்பட்டையில வச்சு தைச்சாங்க. ஊசிப்போட்டதுனால எனக்கு அப்போ வலிக்கல. ஆனா என் ரத்தம் பாத்து எஞ்சினீயரம்மா அழுதாங்க. அவ்ளோ பாசம் என் மேல. அது ஏதோ மைக்ரோசிப்பாம். நான் தொலைஞ்சு போனாலும் கண்டுபுடிக்க உதவுமாம். அடப்பாவிகளா.. நான் தொலைஞ்சுப் போகணும்னு முடிவு பண்ணிட்டா என்ன பண்ணினாலும் உங்களால கண்டுபுடிக்க முடியாதுன்னு கத்த தோணிச்சு. பேசாம இருந்துட்டேன். அடுத்ததா பாஸ்போர்ட்டாம். உங்களுக்குத் தான் பாஸ்போர்ட்ன்னா எங்களுக்கும் வேணுமாம். என்னக் கொடுமை சார் இது? வெட்டினரி டாக்டர் சர்டிஃபிக்கேட் கொடுத்தார். ராபிஸ்க்கு தடுப்பூசி ஏற்கனவே போட்டிருந்ததால எந்த பிரச்சனையுமில்லை. கிளம்ப வேண்டிய நாள் வந்திச்சு. எங்க சானல்ல எல்லோருக்கும் கடைசியா பை சொல்லிட்டு கிளம்பினேன். ஏர்போர்ட் போனதும் தான் தெரிஞ்சது நாங்க போகப்போறது கோபன்ஹெகன். டென்மார்க். அப்போ எனக்குத் தெரியாது. ஜெஸ்ஸிய அங்க தான் சந்திக்கப்போறேன். அவளை காதலிக்கப்போறேன்னு. அந்தக் காதல் என்னை அப்படியே அடிச்சுப் போடும்னு..

Offline Gotham


பாகம் 2:
முதல்முறையா ஏர்போர்ட்டுக்குப் போறேன். சந்தோஷமா இருந்துச்சு. எங்க சானல்ல பலவகையான டாக்களும் விமானத்துல போன கதைய சொல்லுவாங்க. அவ்ளோ ஆசையா இருக்கும். விமானம் பறக்க ஆரம்பிக்கும் போது காது ஜிவ்வுன்னு அடைச்சுக்குமாம். முதல்ல பயமா இருக்கும். ஆனா போகப் போக சரியாயிடும்னு சொன்னாங்க. ஒருவித திகிலோட தான் நான் ஏர்போர்ட்டுக்கு போனேன்.

காரிலேர்ந்து துள்ளிக் குதிச்சு இறங்கியதும் எஞ்சினீயரம்மா என்னைக் கூப்பிட்டாங்க. ‘செல்லமே.. என் தங்கமேன்னு’ ஜெர்மன் மொழியில கொஞ்சிக்கிட்டே, ‘செல்லம்.. கொஞ்சம் நேரம் தான் எங்கள விட்டு பிரிஞ்சு இருக்கப்போற. இந்த பெட்டிக்குள்ள இரு. உனக்கு ஒன்னும் ஆகாது. நாங்க இருக்கறோம்னு’ செல்லம் கொஞ்சினாங்க. அவங்க இருக்கறப்போ எனக்கு என்ன பயம். தலையாட்டிக்கிட்டே வாலாட்டினேன். நான் ஆறுகிலோக்கும் மேல இருக்கறதால பயணிகள் உட்கார்ற கேபினுக்குள்ள இருக்கக்கூடாதாம். தனியா வேறொரு இடத்துல இருக்கணுமாம். நாங்கல்லாம் உயிருள்ள ஜீவன்கள் கிடையாதான்னு கத்தத் தோணுச்சு. எஞ்சினீயருக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதென்னு அமைதியா இருந்தேன்.


என்னைத் தனியா ஒரு கதவு கிரில் போட்ட பெட்டிக்குள்ள வச்சாங்க. நான் நடக்கறதுக்கும் படுக்கறதுக்கும் வசதியா இருந்துச்சு. அப்போ தான் கவனிச்சேன். என்னைய மாதிரி இன்னும் நாலு டாக் அங்க இருந்துச்சு. எங்கள வசதியா அந்த விமானத்துக்குள்ள ஏத்தினதும் உலகமே அமைதியான மாதிரி இருந்துச்சு. ரொம்ப பயமா போச்சு. கொஞ்ச நேரம் தான். அப்புறம் அங்க இருந்த டாக்-கெல்லாம் ப்ரண்ட் ஆயிட்டோம். என்கூட வந்த இன்னொரு டாக் நிறைய தடவை விமானத்துல போயிருக்காம்.


இப்படி தான் அந்த ஏர்பெர்லின் விமானம் பறக்க ஆரம்பிச்சது. ஆரம்பத்துல வயத்துல யாரோ கிச்சுகிச்சு மூட்டற மாதிரி இருந்துச்சு. அப்புறம் போகப்போக சரியாயிடுச்சு. விமானத்துல ஏறரத்துக்கு முன்னாடி நிறைய தண்ணி குடிச்சிருந்தேன். கொஞ்சம் களைப்பில்லாம் இருந்துச்சு. ஒரு வழியா விமானம் கோபன்ஹேகன் வந்தது. இங்க தான் முதன்முதலா ஜெஸ்ஸிய நான் சந்திச்சேன்.


முதல் விமானப்பயணம்ங்கறதால கொஞ்சம் கிறுகிறுப்பா இருந்துச்சு. தரை இறங்கியதும் எங்கள வெளியே கொண்டு வந்தாங்க. எஞ்சினீயரம்மா ஓடி வந்து என்னை கட்டிப்புடிச்சுக்கிட்டாங்க. ரொம்ப பாசக்காரங்க. அப்புறமா ஏதோ இமிகிரேஷனு சொல்லி கூட்டிட்டு போய் நோய் இருக்கானு செக் பண்ணினாங்க. அங்க தான் ஜெஸ்ஸிய சந்திச்சேன். ஜெஸ்ஸி.. பேச சொல்லும் போதே உடம்புல சின்னதா ஒரு அதிர்வு இருக்கு பாருங்க. அதான் அவ. அவ அழகுன்னு சொல்ல முடியாது.. பேரழகி. ஜெஸ்ஸி…ஷி இஸ் செக்ஸி டூ. நான் என் வாழ்க்கையிலேயே அப்படி ஒரு டாக்-அ சந்திச்சதில்ல. அவ்வளவு அசத்தலா இருந்தா. அவளுக்கும் அது முதல் பயணம் போல. பயந்திருந்தா. உடம்பு நடுங்கிட்டு இருந்துச்சு. மிரள மிரள பாத்துட்டு இருந்தா. இப்போ நினைச்சாலும் சிரிப்பா வருது. நான் ஏதோ பெரிய இவன் மாதிரி வால ஆட்டிக்கிட்டு இருந்தேன். வரிசைல எங்களுக்கு மூணு பேர் முன்னால ஜெஸ்ஸிய கூட்டிட்டு வந்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இவ சுத்தி முத்தி தலைய திருப்பிப் பார்க்கும் போது நான் என் முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டேன். நான் பாக்கறத அவ பாத்துடக்கூடாது பாருங்க.


க்யூ மெதுவா நடந்துட்டு இருந்தப்ப தான் அது நடந்தது. திரும்பி திரும்பி அங்கயும் இங்கயும் பாத்துட்டு இருந்த ஜெஸ்ஸி என்னை நேருக்கு நேரா பாத்தா. இத தான் மனுஷங்க பாத்ததும் காதல்னு சொல்றாங்களோ. அந்த நிமிஷம்… அந்த ஒரு கணம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நிமிஷம். என்னை அப்படியே புரட்டிப் போட்டுச்சு. உடம்புல என்னன்னவோ நிகழ்ந்துச்சு. சுத்திலும் மக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி இருந்துச்சு. அவ வாயோரமா ஒரு சின்னப் புன்னகை போதும். நாளெல்லாம் பாத்துட்டு இருக்கலாம். அவ.. என் ஜெஸ்ஸி…சார்.. ஜெஸ்ஸி… என் அஞ்சலைங்க..


அவளுக்குள்ளும் ஏதேதோ நடந்திருக்கும் போல. சட்டென திரும்பிக்கிட்டா. அதுக்கப்புறம் திரும்பவே இல்லை. எனக்கு கொஞ்சம் ஏமாத்தமா இருந்துச்சு. இன்னொரு முறை திரும்பேனு கத்தணும் போல இருந்தது. அங்க ஒரு காதல் காவியம் அரங்கேறுவது தெரியாம மனுஷங்கல்லாம் இயந்திரம் மாதிரி தங்களோட வேலைய பாத்துட்டு இருந்தாங்க. ஜெஸ்ஸியோட இமிகிரேஷன் முடிஞ்சு அவ கிளம்பிட்டா. எனக்குள்ள அப்படி ஒரு பதைபதைப்பு. ஒரு தடவை தான் நேருக்கு நேரா பாத்துக்கிட்டோம். ஒரு வார்த்தைக்கூட பேசினதில்ல. ஆனா என் உசுரே போற மாதிரி எனக்குள்ள அப்படி ஒரு தவிப்பு.


போறாளே போறாளே போறாளேனு சோககீதம் வாசிக்கணும் போல இருந்துச்சு. கடவுளுக்கு ஏன் இப்படி ஒரு கல்நெஞ்சம். எங்கிருந்தோ வந்த எனக்கு என் ஜெஸ்ஸிய காமிச்சு, கண்ணோடு கண் நோக்க வச்சு, ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளேயே எங்கள பிரிக்க வச்சு.. என்ன அமைப்பு இது? புரிஞ்சுக்கவே முடியல. அதோட பெரிய கொடுமை என்னன்னா நமக்கு புடிக்கறவங்களுக்கு நம்ம புடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கறது. ஒருதலையாவே காதலிச்சு வாழ்க்கையில நிறைய மனுஷங்க தோத்ததா நிறைய கேள்விப்பட்டிருக்கேன். என் வாழ்க்கையும் அப்படி ஆயிடுமோ? கடவுளே! ஒரே ஒரு முறை ஜெஸ்ஸி என்னைத் தான் விரும்பறானு தெரிஞ்சிக்கற சந்தர்ப்பத்த கொடு. அத நெனச்சுக்கிட்டே என் காலத்த ஓட்டிடுவேன்னு வேண்டினேன். உடனே கடவுள் கண்ண திறந்துட்டார். தன்னை கூட்டிட்டு வந்த அந்த அம்மாவோட போயிட்டு இருந்த ஜெஸ்ஸி ஒரே ஒரு தடவை என்னை திரும்பிப்பார்த்தா. அதுல ஆயிரம் ஆயிரம் காதல்கதைகள். அப்படி ஒரு காதல்பார்வை பார்த்தா. என்னால நிக்க முடியல. குதிக்க முடியல. ‘என்னைப்பார்த்துட்டா.. என்னைப்பார்த்து சிரிச்சுட்டா’னு கதற வேணும் போல இருந்துச்சு. என் கண்ணில் தாரைத் தாரையா கண்ணீர். என்னையும் என் கண்ணீரையும் பார்த்துக்கிட்டே ஜெஸ்ஸி அந்த கேபில ஏறிப் போனா….!!!

அவ கண்ணிலேயும் கண்ணீர்….!!


Offline Anu

Nice story. continue pannunga.
enaku oru doubt gotham
adhu enna eppavum love storye ezhudaringa..
iduku pinnaala edaachum periya love story  irukumo ...
irundha unga sondha love story ah ezhudunga
interesting ah irukum..


Offline Gotham

நன்றி அனுக்கா.


நான் காதல் கதையும் எழுதியிருக்கேன். சில பார்த்தது கேட்டது. இப்படின்னு. இது ரெண்டு வருஷம் முன்னாடி எழுதினது வேற இடத்துல :D


நீங்க படிக்கறீங்கன்னா மத்த கதைகளையும் வேணா பதிக்கலாம். இங்க யாரும் படிக்கற மாதிரி தெரியல. அதான் அடுத்த பாகத்த போடணுமானு யோசிச்சிட்டு இருந்தேன் :)

Offline Anu

eduku stop seiringa ?
share seiyunga.
sometimes padichitu comments podaama irukalam thaane.
naan neraiya times apadi seiven.
so continue seiyunga ..
kettatha thodaravum koodaathu,nallatha niruthavum koodaadhu ..


Offline Global Angel

ஹஹஹா நாயே உனக்கும் ஒரு லவ் ஆ ... மனுசங்களே லவ் பண்ணிட்டு நாய் படாத பாடு .. அப்போ நாய் லவ் பணினா எப்டி இருக்கும் ... ஹஹஹா கோதம் நாய் காதல் நல்லாத்தான் போகுது .. அதிலும் இந்த நாய் குசும்பு தாங்கல... மனுசங்கள எனமா கலைக்குது ... ஹ்ம்ம் வாய் விட்டே சிரிச்சுட்டேன் பல பகுதில ... ஹஹஹா
                    

Offline Gotham

நன்றி க்ளோபல் ஏஞ்சல். சில விஷயங்கள முழு கதையும் பதிஞ்சபின்னாடி சொல்றேன். :)

Offline Gotham


பாகம் 3:
------------------------------------------------------------------------------------------------------------------
சொல்ல மறந்துட்டேன். ஜெஸ்ஸி பொமரேனியன் இனத்தை சேர்ந்தவ. நல்லா புசுபுசுனு நிறைய முடி இருக்கும். வெள்ளைக் கலர்ல. பார்க்க தேவதை மாதிரி இருப்பா. அவ வாலாட்டிட்டு போற ஸ்டைலே தனி. அவ அந்த இடத்தை விட்டுப் போனதும் உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு. கண்ணை இருட்டிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு. உண்மையிலேயே நான் மயக்கமாயிட்டேன்.

கண் முழிச்சுப் பார்த்தா ஏதோ ஆஸ்பிடல்ல இருந்தேன். சுத்தி அந்த எஞ்சினீயரம்மாவும் எஞ்சினீயரும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. எஞ்சினீயரம்மா கண்ணுல கண்ணீர். ‘விமானப்பயணம் ஒத்துக்கலேன்னும் அதனால மயக்கமாயிருக்கலாம்னும்’ டாக்டர் சொல்லிட்டு இருந்தார். ரெண்டு மூணு நாள்லேயே சரியாயிடும்னு சொல்லி கொஞ்சம் மருந்து எழுதிக் கொடுத்தார். எனக்கில்ல தெரியும் உயிர் போனதுக்கு அப்புறம் இங்கிருப்பது வெறும் உடல் தானே. என் ஜெஸ்ஸி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ? ஆனா அவ இந்த நாட்டில தான் இருக்காங்கற நெனப்பே எனக்கு தெம்ப கொடுத்தது.

ஊருக்கு கொஞ்சம் தள்ளி பெரியவீட்டை எஞ்சினீயர் வாடகைக்கு எடுத்திருந்தார். பெரிய வீடு, நீச்சல்குளம், நான் தங்க தனிவீடுனு அமர்க்களமா இருந்தது. நாங்க போன நேரம் வானிலையும் நல்லா இருந்தது. ரெண்டு நாள் வீட்டில நான் ரெஸ்ட் எடுத்தேன். எஞ்சினீயரம்மா எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடும் மருந்தும் கொடுத்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு கார்ல ஊர் சுத்த கிளம்பினோம். அந்த ஊரில இருக்கிய பெரிய பார்க்குக்கு போனோம்.

பார்க்க பார்க்க என் கண்ணு விரிஞ்சுது. யப்பா.. எவ்ளோ பெரிய பார்க். டஸல்டார்ஃப்ல பார்க் இருக்கும். ஆனா இவ்ளோ பெரிசு இல்லே. ஏகப்பட்ட மரங்களும், செடிகளும்.. பச்சைப்பசேல்னு புல்வெளிகளும்னு ஆள அசத்துச்சு. கூட்டமும் அதிகமில்லை. என்னை மாதிரியே நிறைய டாக்குங்க வந்திருந்தாலும் புது இடங்கறதால யார்கிட்டேயும் பேசல. என்னைக் கூட்டிட்டு போன எஞ்சினீயர் கொண்டு வந்திருந்த ஃப்ரீஸ்பிய தூக்கிப் போட்டார். நான் ஓடிப் போய் எடுத்து வந்தேன். இது தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச விளையாட்டு. விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. எஞ்சினீயரம்மா ஒரு ஓரமா பெஞ்ச்சில உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிட்டு இருந்தாங்க. அன்னிக்கு தான் எனக்கு விஷயமே தெரியும், எங்க வீட்டுல நாலாவதா ஒருத்தர் வரப்போறாங்க. இன்னும் ஏழு மாசத்துலேன்னு. எஞ்சினீயரம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அவங்க மட்டுமில்ல. அங்க நான் பார்த்த பல பேரு எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருந்தாங்க. உலகத்துலேயே சந்தோஷமான மக்கள் அதிகமிருக்கற நாடுன்னு சும்மாவா சொன்னாங்க.

விளையாடிக்கிட்டு இருக்கறப்போ அடிச்ச காத்துல ஃப்ரிஸ்பி ஓரமா இருந்த பெரிய புதர்க்குள்ள விழுந்துடுச்சு. இருட்டா இருந்த புதர்க்குள்ள நுழைஞ்ச நான் தேடிக் கண்டிபுடிச்சேன். எடுக்கலாம்னு வாயில கவ்வும் போது எதிர்பக்கமா யாரோ இழுக்கற மாதிரி இருந்துட்டு. எங்க இனத்துக்கே தோக்கற பழக்கம் கிடையாது. நானும் வலுக்கட்டாயமா இழுக்க ஆரம்பிச்சேன். யாரோ ஒரு டாக் இழுக்குது. வெளியில ஃப்ரிஸ்பியோட அந்த டாக்கையும் இழுத்துட்டு வந்துட்டேன். வந்ததுமே என் வாயிலே இருந்த ஃப்ரிஸ்பிய விட்டுட்டேன். நீங்க நினைக்கறது உண்மை தான். சந்தேகமே இல்லாம அது ஜெஸ்ஸி தான். இமைக்க இமைக்க பாத்துட்டு இருந்தேன். ஜெஸ்ஸியும் ஃப்ரிஸ்பிய போட்டுட்டு என்னைப் பார்த்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. இருக்காதா பின்ன என்ன மாதிரி ஒரு ஆண் டாக் காதலனா கிடைக்க எத்தனையோ பெண் டாக் தவம் கிடக்கும் போது. ஜெஸ்ஸி பல் அத்தனையும் முத்து போல வெண்மை. அவளை மாதிரியே. ரெண்டு பேரும் பார்த்துட்டே இருக்கும் போது ,’ஜெஸ்ஸி.. ஜெஸ்ஸி’னு கூப்பிட்டுக்கிட்டே அவ அம்மா வந்தாங்க.

அப்போ தான் அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும். காதுமடல்லாம் துடிக்க துடிக்க வாலை மிக வேகமா ஆட்டினேன். ஜெஸ்ஸியும் வேகமா ஆட்டினா. என்னை அவளுக்கு ரொம்பபிடிச்சுப் போட்டு.

அதே நேரத்துல என்னை தேடிக்கிட்டு எஞ்சினீயர் வர அவர் கூப்பிட்டதுலேர்ந்து தான் என் பேர் மார்க்னு ஜெஸ்ஸி தெரிஞ்சுக்கிட்டா. இன்னும் வேகமா ஆமோதிக்கற மாதிரி வாலாட்டினா. எஞ்சினீயரும், ஜெஸ்ஸியோட அம்மாவும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..

“ஹாய் நான் டேனியல்..” “நான் க்ளாரா..!”

அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே எஞ்சினீயரம்மா இருக்கற இடத்துக்குப் போக நானும் ஜெஸ்ஸியும் பின் தொடர்ந்தோம். எங்க மௌனமே எங்களுக்குள்ள பல உரையாடல்கள நடத்துச்சு. முதல் முறையா என் பக்கத்துல நடந்து வர ஜெஸ்ஸி வெட்கப்பட்டா. அதனால கொஞ்சம் தள்ளித் தள்ளி நடந்தா. பேசலாம்னு பாத்தா…. முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டா. அப்புறமா சொன்னா.. அன்னிக்கு ரொம்ப வெக்க வெக்கமா இருந்துச்சாம். நானும் விடாம அவ வாலைத் தட்டினேன். அவ கண்டுக்கல.

எஞ்சினீயரம்மாக்கிட்ட போனதும் அவங்க மூணு பேரும் பேச ஆரம்பிக்க என்னையும் ஜெஸ்ஸியையும் தனியே விட்டுட்டாங்க. இதான் சந்தர்ப்பம்னு ஜெஸ்ஸிய பாத்து செல்லமாய் கூப்பிட அவ ஓட ஆரம்பிச்சா. நானும் விடல. துரத்த ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஓடி ஓடி அந்த பார்க் ஓரத்துல இருந்த ஏரிக்கரைக்கு வந்துட்டோம். ஏரியோரமா காலை நெனச்சுக்கிட்டு ஜெஸ்ஸி நிக்க நானும் பக்கத்துல நின்னேன். சூரியன் அப்போ தான் மறைய ஆரம்பிச்சிருந்தான். அந்த இடமே தகதகன்னு ரம்மியமா இருந்துச்சு. கூடவே என் ஜெஸ்ஸி வேற. கேக்க வேணுமா..? சத்தியமா நான் சொர்க்கத்திலே தான் இருக்கேன்.

மெதுவா பேச ஆரம்பிச்சேன்.

“ஜெஸ்ஸி…”

“ம்ம்..”

“என்கிட்ட பேச மாட்டியா..?”

“அப்படி எல்லாம் இல்லே..”

“பின்ன ஏன் பாத்தும் பாக்காத மாதிரி இருக்க..”

“என்னமோ தெரியல.. வெக்கம் வெக்கமா இருக்கு..”

“என்கிட்ட என்ன வெக்கம்.. உன்னை முத முதலா ஏர்போர்ட்ல பாத்தவுடனே என் மனச பறிகொடுத்துட்டேன்..”

“நானும் தான்.. ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. உடனே கிளம்பினவுடனே.. அழுகை அழுகையா வந்துச்சு..”

“நானும் பாத்தேன். என் மேல அவ்ளோ ஆசையா..”

ஆமாம் என்பது போல் தலையாட்டினா..

அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு. நாங்க பேசினது எங்க பாஷையில. உங்க வசதிக்காக மொழிபெயர்த்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே அவங்க மூணு பேரும் இருந்த இடத்துக்கு வந்தோம். கிளம்ப வேண்டிய நேரம் வந்தததும் துக்கம் தொண்டையை அடைக்க பிரியாவிடை பெற்றோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ரொம்பவே அசதியா இருந்தாலும் ஜெஸ்ஸிய சந்திச்சு பேசினது ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு. சாப்டுட்டு சீக்கிரமே படுக்கப் போயிட்டேன். கனவுல ஜெஸ்ஸி… தேவதை மாதிரி. அவளுக்கும் எனக்கும் ரெக்கை முளைச்சிருக்கு. ரெண்டு பேரும் பறந்துக்கிட்டே உலகத்துல இருக்கற அதிசய இடங்கள்ல்லாம் சுத்திப் பார்க்கிறோம். எப்போ தூங்கினேன்னு தெரியல.

அடுத்த நாள் காலையில் ஒரு ஆச்சர்யம் காத்துட்டு இருந்தது.

Offline Global Angel

 ;D ;D ;D  நல்லா காதலிகுறாங்க.. ஹஹஹா .. சிரிப்பு தாங்கலப்பா ...
                    

Offline Gotham

ஏன் அவங்க காதலிக்க கூடாதா?


எழுதி 2 வருஷம் ஆச்சு. இப்ப்போ படிச்சா காமெடியா இருக்கு.

Offline Anu

hahahahaha.
funny n romantic ah iruku..adhaane ninga solradhum seri thaan.
naaikaluku paasam irukalam love iruka koodaatha enna?
idhu ninga ezhudina kadhaiya gotham ?
mark n Jessy romance thodara en vaazthukkal
very nice .


Offline Gotham

சத்தியமா நிச்சயமா நானே எழுதினது. வேற பேர்ல. வேற இடத்துல.


நன்றிக்கா..

Offline Anu

சத்தியமா நிச்சயமா நானே எழுதினது. வேற பேர்ல. வேற இடத்துல.


நன்றிக்கா..
ada very nice..
nandri engalukaaga ingha padhivu seidhaduku :)
melum thodara en vaazthukkal.
idhuku eduku promise lam solringa gotham.


Offline Gotham


பாகம் 4:
-------------------------------------------------------------------------------------------------------
காலையில் எழுந்ததும் வாழ்க்கையே புதுசா தோணிச்சு. என்னிக்கும் இல்லாத நாளா உலகம் ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சுது. உலகத்துல எல்லோருமே சந்தோஷமா இருக்கற மாதிரி. பரபரன்னு இருந்துச்சு. சந்தோஷம் தாங்காம வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஓடினேன். சந்தோஷத்தை வெளிப்படுத்தினேன். நேத்து ஜெஸ்ஸி கூட பேசினது இன்னமும் என் காதிலேயே கேட்டுட்டு இருந்துச்சு.

ஏரிக்கரையோரமா நடந்துட்டு வரும் போது

“ஜெஸ்ஸி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..?”

என்ன என்பது போல் பார்த்தாள்.

“என்னைப் பார்த்ததும் உனக்கு ஏன் அவ்ளோ புடிச்சுப் போச்சு?”

அவள் முகம் அழகாய் வெட்கப்பட்டது.

“சில விஷயங்களுக்கு ஏன்ங்கற கேள்விக்கு பதில் கிடையாது. உங்க அழகா, கம்பீரமா..ஏதோ ஒன்னு என்னை ஈர்க்குது. ஆமா என்னை எப்படி புடிச்சுது?”

“அதே பதில் தான்.. உன்னோட துறுதுறுப்பும்..அங்கங்க அலைபாயற கண்களும்.. யப்பா என்னமா இழுக்குது”

இன்னும் அதிகமாய் வெட்கப்பட்டாள்.

“நீ எங்கிருந்து வர்றே..?” ஜெஸ்ஸியை கேட்டேன்.

“ஸ்விஸ்லேர்ந்து. க்ளாராம்மாக்கு இங்க வேல கிடச்சுதுன்னு மாத்திக்கிட்டு வந்துட்டாங்க.”

“ஓ.. அவங்க தனியாவா இருக்காங்க..”

“ஆமா. எனக்கு தெரிஞ்ச நாள்லேர்ந்து தனியா தான் இருக்காங்க. சொந்தம்னு சொல்லிக்க நான் மட்டும் தான்”.

“ம்ம்..” நான் என் கதையை சொல்ல அவள் ஆர்வமானாள்.

இன்றைக்கு அதை அசை போடுகையில் சுகமாய் இருந்தது. வீட்டுக்கு முன்னிருந்த புல்வெளியில் கனவு கண்டு கொண்டே விளையாடிய போது யாரோ கூப்பிடுவது மாதிரி இருக்க திரும்பினேன். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

பக்கத்து வீட்டு மாடியில் ஜெஸ்ஸி நின்று கொண்டிருந்தாள். கட்டைகளுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் தலையை வெளியே விட்டு தன் இனிய குரலால் என்னைக் கூப்பிட்டாள். “மார்க்”

என் பேர் இத்தனை இனிமையாக ஒலிக்கும்னு இது வரை நான் நெனச்சத்தில்லை. அவள் கூப்பிடும் போது மட்டும் பாடலாய் ஒலித்தது. அவள் கூப்பிடுவதாலேயே என் பேரை எனக்கு மிகவும் பிடிச்சுப் போனது. கண்ணில் காதல் வழிய ஜெஸ்ஸி என்னைப் பார்க்க நான் அவளைப் பார்க்க ஒரு காதல் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மனது பலவகைகளில் லேசாய் பறக்க ஆரம்பித்தது. ‘ ஜெஸ்ஸி.. பக்கத்து வீட்டில் தான் இருக்கிறாள்.’ அந்த நினைப்பே உடலை லேசாக்கியது. இதோ கூப்பிடு தூரத்தில் என் ஜெஸ்ஸி. நினைத்த மாத்திரம் பேசிக் கொள்ளலாம். ஆண்டவன் கருணையே கருணை. மனம் நெகிழ்ந்து போயிருந்தது.

அன்று முழுதும் வெளியிலிருந்து ஜெஸ்ஸி கூட பேசிக்கிட்டு இருந்தேன். அர்த்தமில்லா பேச்சு தான். கேக்கறவங்களுக்கு ஒன்னுமே புரியாது. ஆனா ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். எல்லாம் என் மேல் அவள் கொண்ட காதலும் அவ மேல் நான் கொண்ட காதலும். அன்னிக்கு சாயங்காலமா க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்தாங்க. எனக்கு ஒரே சந்தோஷம். ஜெஸ்ஸி கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கலாமே.

எங்க வீட்டு புல்வெளியில இரண்டு பேரும் ஓடிப்பிடிச்சு விளையாண்டோம். அப்புறம் எங்க வீட்ட சுத்திக் காமிக்க ஜெஸ்ஸிய கூட்டிட்டு போனேன். நான் சொன்ன கதையெல்லாம் கண்ண விரிச்சு கேட்டா. ஆச்சர்யத்தினால அந்த ரெண்டு நாள்ல அந்த வீட்டில இருந்த எல்லா இடமும் எனக்கு அத்துபடி. மாடியில தொங்கும் தோட்டம் இருந்தது. அங்க ஊஞ்சல் கட்டியிருந்தாங்க. சாயந்திர நேரத்துல அங்க உட்கார்ந்து எதிர்ல மறைய சூரியன பாத்திட்டு இருக்கலாம். நானும் ஜெஸ்ஸியும் அந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து சூரியன் மறையறத பாத்துட்டே இருந்தோம். நேரம் போனதே தெரியல. என் தோளில் அவள் தலையும் அவள் தலை மீது என் தலையும் வச்சு நிலாவையே பாத்துட்டு இருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு க்ளாராம்மா ஜெஸ்ஸிய கூப்பிட நானும் ஜெஸ்ஸியும் கீழே வந்தோம்.

க்ளாராம்மா கிளம்ப ஜெஸ்ஸி பிரிய மனமில்லாம போனா. அவ கண்ணில இருந்த ஏக்கம்..அப்பப்பா. எனக்கும் துக்கம் தொண்டைய அடைச்சுது. ஏதோ ரொம்ப நாள் நம்ம கூட இருந்தவங்க பிரிஞ்சு போற மாதிரி. எங்க வீட்டிலேயும் க்ளாராம்மாவும் ரொம்ப ஸ்னேகமாயிட்டாங்க. எஞ்சீனியரும் க்ளாராம்மாவும் ஒரே ஆபிஸில தான் வேலை பாத்தாங்க. அதனால நாங்க அடிக்கடி அவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க எங்க வீட்டுக்கு வர்றதும்னு வாழ்க்கை போச்சு.

ஒவ்வொரு தடவை ஜெஸ்ஸிய பாக்கற போதும் அன்னிக்கு தான் புதுசா பாக்கற மாதிரி இருக்கும். அவ்ளோ புத்துணர்ச்சியோடு இருப்பா. கண்ணில அந்த காந்தப்பார்வை அப்படியே சுண்டி இழுக்கும். அடிக்கடி எல்லோரும் சேர்ந்து பிக்னிக் போறப்ப எனக்கும் ஜெஸ்ஸிக்கும் ஏக சந்தோஷமா இருக்கும், அவங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்க நாங்க ரெண்டு பேரும் ஓடி விளையாடுவோம். களைச்சுப் போனா அப்படியே நடந்து போயிட்டு வருவோம். அந்த ஊரில நான் ஜெஸ்ஸிய தவிர எந்த டாக் கூடவும் பேசினதில்ல. பேசவும் தோணல. ஜெஸ்ஸி மட்டுமே போதும். அவ கூட பேசிட்டு இருந்தாலே போதும். இந்த உலகத்துல நானும் அவளும் மட்டுமேனு அடிக்கடி தோணும். அந்தளவுக்கு எங்க காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர ஆரம்பிச்சுது.

அப்படி இருக்க ஒரு நாள் காலையில நான் எந்திருக்கும் போது இடி விழற மாதிரி அந்த விஷயம் நடந்தது.