Author Topic: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~  (Read 15843 times)

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #15 on: September 15, 2012, 03:18:47 PM »

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #16 on: September 15, 2012, 03:26:43 PM »


உன்னை மறக்க நான் நினைப்பதில்லை
என்னை மரணம் வந்து அழைக்கும் வரைக்கும்
நீ தந்த காயங்களோடு உன் நினைவுகளை சுமந்த படி என் காதல் என்றும் வாழும்.....

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #17 on: September 15, 2012, 03:48:09 PM »


பிரிவை எந்த அளவிற்கு வெறுக்கிறோம்
என்பதை ,
பிரிந்திருக்கும் போது அல்ல ,
மீண்டும் சந்திக்கும்போது தான் உணரமுடியும் .

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #18 on: September 16, 2012, 11:15:09 AM »


அம்மா....
என்னை இந்த உலகுக்கு அறிமுகபடுத்தியவள் . . .
என் முதல் தோழியும் கூட . . .
என் செல்ல குறும்புகளை செல்லமாய் திட்டியபடி ரசிப்பவள் . .

அம்மாவின் அன்புக்கு இணை என்றுமே
உலகில் இல்லை . . . .

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #19 on: September 16, 2012, 11:24:09 AM »


அழகான மலர் அவள்
வாடாத இதழ் கொண்டவள்.
தெகட்டாத தேன் சுவை
பேச்சு கொண்டவள்.
கலங்காத உருவம் கொண்டவள்.
என் கனவின் வடிவம் அவள்.

பஞ்ச பூதங்களை விட
பொறுமையானவள்.
என் உயிருக்கு
கருவறை கொடுத்தவள்
ஒரு சொல்லில் நம் சோகம்
மறக்க செய்பவள்.
என் இறுதி ஊர்வலம் வரை
இவள் பந்தம் தொடர செய்பவள்.

என் தொப்பையில் அவள் உறவை.
இணைத்து கொண்டவள்.
மரத்தின் ஆணிவேர் போல்
என் உறவில் தன்,
உதிரம் பதித்தவள்.

அனுமதி இல்லாமல்.
என் தலை சாய
இடம் தந்தவள்.
தன் மூச்சு காற்றால்
என்னை உறங்க செய்தவள்.
என் உறவின் விடிவெள்ளி
நீ தானம்மா..

சொல்லி சொல்லி அழைத்தாலும்
என் கண்கள் காண ஏங்கும்.
உருவம் நீ தானம்மா!
என் இலட்சியத்தின்
விடிவெள்ளி நீ தான் அன்னையே!
உன்னை பற்றி கவிதை சொல்லிவிட
இந்த தமிழ் எழுத்துகள் போதுமா?
என் அம்மாவே.
ஒரு சொல்லில் என் உலகம் நீ அம்மா !

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #20 on: September 16, 2012, 11:27:39 AM »


மரணம் கண்ட
உன் இதயம்
மரணிக்க முன்
மரண வாசம் வீசும்
சொற்களையா -நான்
உன் மேல் பொழிந்தேன் ..
என் ஆருயிர் நட்பே.....

கடலை முத்தமிடும்
வானவில் போல்
நட்பை முத்த மிடும்
உன் நினைவுகளை-தான்
நான் காயம் செய்தேனே!
என் ஆருயிர் நட்பே!

மழைத்துளியில் நனைந்த போதும்
முழுவதுமாய் நனைய வில்லை
உன் நட்பு மழையில்
நனைந்த போது
ஈரம் இல்லை ..ஆனாலும்
சோகம் இல்லாமல்
நனைந்து விட்டேன்
என் ஆருயிர் நட்பே!

சிறு குழந்தை போல்
பேசி விட்டேன் நட்பே!
நட்பென்னும் அன்னை போல்
என்னை மன்னிப்பாயா!
என் ஆருயிர் நட்பே!

விடியலுக்காய் காத்திருக்கும்
பூக்கள் போல் ...
உன் நட்புக்கை காத்திருக்கிறேன்
என் ஆருயிர் நட்பே !
என்னை மன்னித்து விடு

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #21 on: September 17, 2012, 10:04:47 PM »

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #22 on: September 17, 2012, 10:10:42 PM »


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #23 on: September 17, 2012, 11:08:06 PM »


மனதோடு ஒரு காதல்
கனவோடு கரையுது ..
எட்டாத நிலவு போல்
தேய்ந்து தான் போகுது ...

சுகமாய் நான் நினைக்க
சுமையாகி போகுது ..
இரவோடு கரைந்து போக-இது
சொர்ப்பனத்தில் வந்த கதாலடி ...

முடியாத வழக்கு போல்
முடிவில்லாமல் போகுதடி ..
கனவோடு வந்ததால்
கற்பனையில் வாழுதடி ..காதல் ...

பாராமுகம் பார்த்து .
பழகிப்போனவன் அல்ல,,,
உச்சரித்த உதடுகளை
வாருடித்தான் பார்த்தவன் அல்ல ..

இரவோடு போராடி
கனவோடு வாழ்ந்தவன் நான்
கற்பனையில் உன்னை எண்ணி
நியமாகி வாழ்ந்து விட்டேன் ..
புயலான வாழ்வில் ..
புழுதியால் என்னை மறைத்து விடாதே ,
என் கற்பனையே!!!

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #24 on: September 20, 2012, 10:25:54 PM »


கண்ணாடி இதயம் காதலில் உடையும்
என்று சொல்லிவிட்டு ஏன்
தேடுகிறாய் உடைந்த கண்ணாடியில்
எனது பிம்பத்தை
ஓட்ட வைக்க வைத்து கொள்
என் காதலை உன் மனதில்
மரணம் வரும் வரை
மருந்தாக இருக்கட்டும் என் காதல் உன்னில்...

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #25 on: September 20, 2012, 10:30:33 PM »


நேற்று வரை உனக்கு நான் எனக்கு நீ,
இன்றுலிருந்து எனக்கு உன் நினைவுகள்...
உனக்கு யாரோ???
ஏற்க முடியாத வலிகள், மறக்க முடியாத உந்தன் நினைவலைகள்!!!

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #26 on: September 25, 2012, 06:11:19 PM »

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #27 on: September 25, 2012, 06:13:13 PM »

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #28 on: September 25, 2012, 06:15:49 PM »


காலம் சென்றாலும்
கனவுகள் மறைந்தாலும்
கவிதைகள் அழிந்தாலும்
என் உயிர் பிரிந்தாலும்
காற்றோடு தொடர்ந்து வருவேன்
உன் காதலுக்காக........!!!

Online MysteRy

Re: ~ Yenaku Piditha Kavithai Athu Ungalukaga ~
« Reply #29 on: September 25, 2012, 06:21:42 PM »


இரவு நேரம்
கனவொன்று கண்டேன்
விடியலின் ஓரம் நீந்துகிறேன்
காலை நெருங்கும் நேரமது
நேற்றைய வலிகளும்
நாளைய எதிர்பார்ப்புகளும்
எதிர்நோக்கியிருக்கும் ஏமாற்றங்களும்
இன்றைய என் வாழ்வை
வாழ விடுவதில்லை
கடந்து போனவையும்
கடக்க போவதையும்
எண்ணி எண்ணி
இன்று கடந்து கொண்டிருக்கும்
திருப்ப இயலாத வாழ்க்கை பக்கங்களை
தொலைத்து கொண்டிருக்கிறேன்