காதலித்து பார் ஒரு பெண்ணின் பார்வையில் எள்ளலும் எதார்தமும் நிறைந்து
//சிறு கரும் புள்ளி தெரிந்தால்
கவலைகளின் ரேகைகளை படர விடுவாய்
காலமே
உன்னை காவு கொண்டதுபோல் -காதலித்து பார்
//
பெண்களுக்கே உள்ள கவலை, ஆனால் கரும்புள்ளிகளை காதலிக்கத் தெரிந்தவர்கள் என்றே நினைக்கிறேன்
//தெருவோரம் நிக்கும்
சொறி நாயும் பார்க்காது
இருந்தும் ஊரே பார்ப்பது போல்
உள்ளுக்குள் தோன்றும் -காதலித்து பார்
//
இந்த இடத்திலும்
//மாதம் பிறந்து
முதல் பத்து நாள் சென்று
பின்வரும் ஈர் பத்து நாளும்
உன் மணிபர்சில் சனி இருக்கும் -காதலித்து பார்
//
இந்த இடத்திலும் சத்தமாய் சிரித்துவிட்டேன்
//சந்தேகங்களை குத்தகைக்கு எடுத்து
அவை உன் மனசை பேய்வீடாக்கும்
மணிக்கூண்டின் மணி எல்லாம்
மரண ஒலியாகும்அந்நேரம் -காதலித்து பார் //
காதலிக்கும் யாவர்க்கும் உள்ள அச்சம், எனினும் பெண்களுக்கு இன்னும் அதிகமாய் இருக்கும் போலும்
//நிலவோடு பேசுவாய்
நீர் நிலையோடும் பேசுவாய்
கனவோடும் பேசுவாய்
காத்திருக்கும் உன் உறவுகளோடு மட்டும்
பேசாது போவாய் -காதலித்து பார்
//
மிக எதார்த்தமான நிதர்சனமான வரிகள்
//பொட்டு வைப்பது மறக்கும்
பொருட்டாய் வேலை செய்வது மறக்கும்
பொறுமைக்கும் உனக்கும்
இடைவெளி அதிகமாகும் - காதலித்து பார் //
சுருக்கென கோவம் அதிகமாய் வருமோ பெண்களுக்கு, ஆண்களுக்கு அப்படியில்லை, 10 மணிக்கு வர சொன்னால் 9 மணிக்கே போய் 11 மணி வரைக்கும் வர போரவங்களுக்கு எல்லாம் வழிகாடியாகவும், வேடிக்கை பொருளாகவும் ஆகி, வந்தவுடன் ஒரு குளிர்வு குளிர்ந்து அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கிளம்புறேன் நேரமாகுது எனும் போது 2 மணி நேரம் காத்திருந்தத சொல்லவும் முடியாம மெள்ளவும் முடியாம மையத்துல மண்டைய ஆட்டி, அடுத்த முறையாவது இன்னும் கொஞ்சம் அதிக நேரம் பேசுற மாதிரி வா என்று சொல்லி தேவுடு காத்ததை எல்லாம் மறைத்துக் கொண்டு வழியனுப்பி வைக்கும் பொறுமைசாலிகள்
//கனவுகளின் ராஜ்யத்தில்
நீ மகாராணி ஆவாய்
நிஜங்களின் போராட்டத்தில்
வினா தாளாவாய்- காதலித்து பார்
//
அப்பட்டமான உண்மை, இந்த தேர்வில் வெற்றி பெறுவதற்குள் அனைவரும் படும் பாடு இருக்கிறதே, சொல்லி மாலாது, அவனவனின் நடுக்கம் அவனவனுக்குத்தான் தெரியும், அந்த வலி, பயம், குழப்பம், பதட்டம், போராட்டத்தை, மிக சாதாரணமாக சொல்லிட்டீங்க, இதற்கு தனி பாராட்டு
மிக நல்ல கவிதைங்க, வைரமுத்து கவிதை போலல்லாமல் தனிச்சுவை